r 1

சென்னை:

தமிழகம் மற்றும் புதுவையில் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்தை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் பார்வையிட்டார்.

சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இந்த மழை வெள்ள சேதத்தை பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் ஹெலிகாப்டரில் சிறிது நேரம் பார்வையிட்டனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுவை சென்றார்.

அங்கு காரில் பயணித்து ரோடியார்பேட்டை, ரியான்குப்பம், கிரம்பாக்கம் உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். ரேடியோ மில் ரயில்வே கேட் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார் ராகுல்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ வெள்ள பாதிப்பு எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை நேரில் பார்வையிடவே வந்தேன். இப்போது அரசியலைவிட இதுதான் முக்கியமானது. தமிழகம் மற்றும் புதுவை மக்களின் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்” என்றார்.

r 1
தொடர்ந்து கடலூரில் காரைக்காடு பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளையும் பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார். மாணவர்களையும் காந்தி சந்தித்து உரையாடினார்.

பிறகு சென்னை ராகுல் அவர் மேற்கு தாம்பரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பை நேரில் பார்வையிட்டார். முடிச்சூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

சமீபத்தில் வெள்ள சேதத்தை பார்வையிட வந்த பிரதமர் மோடி, விமானத்தில் இருந்தே சிறிது நேரம் பார்வையிட்டுச் சென்றதும், அவரது விமானப்பயண புகைப்படம் கிராபிக்ஸ் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தின.

r3

இந்த நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, மக்களை நேரடியாக சந்தித்தது மக்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அளித்தது.