12241397_774451902665034_7431138236980323305_n

வெள்ள சேதம் அதிகம்தான். மக்கள் படும் துயரும் சொல்லி மாளாது.  தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதுபோல, இந்த துயரத்துக்கும் காரணம் நாம்தான்!

நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியது, தூர்வாரும் பணிகளில் நடக்கும் ஊழல்களை கண்டுகொள்ளாமல் இருந்தது போன்ற சுயநல குணத்தினால் இன்று துயரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

குறைந்தபட்சம் பிளாஸ்டிக் பொருட்களை, பைகளை பயன்படுத்தாமல் தவிர்க்கலாம் என்றால் அதைக்கூட செய்வதில்லை.

வெள்ளத்துக்கும், பிளாஸ்டிக்குக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?

வெள்ள நேரத்தில், கழிவுகளை முழுமையாக அகற்ற முடியாது.  அந்த நிலையில் பிளாஸ்டிக் குப்பைகள்,  நீரில் மிதந்து வடிகால் கால்வாய்களை அடைத்துக்கொள்கிறது.   வெள்ள பாதிப்பு அதிகரிக்கிறது.

பெரிய சமூகத்தொண்டெல்லாம் நாம் செய்ய வேண்டாம். பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம். குறைப்போம். அதோடு அவற்றை கண்ட இடத்தில் வீசுவதை தவிர்ப்போம்.

அ.விச்வநாதன், படம்: வஹாப் ஷாஜஹான்