வெள்ளையன் மகன் கைது
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் மகன் டைமண்ட் ராஜூ, தனது நண்பர்களுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள பெண்கள் அழகு நிலையத்திற்கு குடிபோதையில் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். அழகு நிலையத்தில் இருந்த பொருட்களையும் அள்ளிச்சென்றுள்ளார். இது குறித்து அழகு நிலையத்தின் நிர்வாகி பாபு அளித்த புகாரின் பேரில் டைமண்ட் ராஜூ உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.