விஷாலுக்கு உதவிய விஜய், சரத்!

Must read

ss

விஜய் நடிக்கும் ‘புலி’ அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் என பெரிய பெரிய நட்சத்திரங்கள்,  பெரிய பட்ஜெட்… என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

பட வேலைகள் எல்லாம் முழுவதுமாக முடிந்து அக்டோபர் 2-ம் தேதி ரிலீஸ் என்று தேதியும் அறிவித்துவிட்டார்கள். ஆனால் ஷூட்டிங் ஆரம்பித்ததில் இருந்து  இன்று வரை விஜய்க்கு டென்ஷன்தான்!

படக்குழுவினரை முந்திக்கொண்டு படத்தின் டீஸர், புகைப்படங்கள் என அடுத்தடுத்து ரகசியமாக (!) ரிலீஸ் ஆகிக்கொண்டே இருந்தன.

சில நாட்களுக்கு முன்பு கூட இதுதான் ‘புலி’ படத்தின் கதை என்று 18 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்று வெளியானது.

இதனால் விஜய் அப்செட். இந்த நேரத்தில், பாயும்புலி  படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று தியேட்டர்காரர்கள் அறிவிக்க.. பதிலுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, “செப்டம்பர் 4 முதல் படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம்” என்று அறிவிக்க, படு டென்ஷன் ஆகிவிட்டார் விஜய்.

“ஏற்கெனவே நம்ம படத்த பத்தி பல நியூஸ் லீக் ஆகிட்டிருக்கு. இப்போ செப்டம்பர் 4 முதல் புது படங்கள் ரிலீஸ் கிடையாதுன்னு முடிவு செஞ்சா.. இந்த படங்கள் ரீலீஸ் தள்ளிப்போகும். அப்போ புலி படத்துக்காக பேசி வச்சிருக்கிற தியேட்டர்கள்ல சிலதை கொடுங்கன்னு யாராவது கேப்பாங்க.. தேவையா இது” என்று நட்பு வட்டாரத்தில் பொங்கிய விஜய், இந்த ஆதங்கத்தை கலைப்புலி தாணுவின் காதுக்கும்  சென்று சேரும்படி பார்த்துக்கொண்டாராம்.

அதோடு நடிகர் சங்க தலைவர் சரத்குமாரும், “பாயும்புலி படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கக்கூடாது” என்று அறிவித்தார்.

இதையடுத்துதான் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த, “ரிலீஸ் தடை” கேன்சல் ஆகி.. இன்று முதல் பாயும்புலி வெள்ளித்தியில் பாய்கிறது!

vijay_puli_230415t (2)

ஆச்சரியம் என்னவென்றால், விஜய்யை அப்படியே டிட்டோவாக ஃபாலோ செய்து வெறுப்பேற்றுபவர் விஷால். விஜய் போலவே ஊர் ஊராக சென்று ரசிகர்களை சந்திப்பது, நலத்திட்ட உதவி வழங்குவது.. இப்படி! அதே போல முன்பு விஜய் ரசிகர் மன்ற தலவராக இருந்தவர்தான் இப்போது விஷால் மன்றத்தின் பொறுப்பாளர். ஆகவே விஜய்க்கும் விஷாலுக்கும் ஏழாம் பொறுத்தம்தான்.

அதே போல, நடிகர் சங்க விவகாரத்தில் சரத்தும், விஷாலும் எதிரெதிர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் இப்போது பாயும்புலி வெளியாக அந்த விஜய்யும், சரத்தும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள்!

இதைத்தான் விதி, விதி என்பார்களோ..!

More articles

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article