நயன் 1நிச்சயமாக நயன்தாராவை “காதல் பிசாசு” என்று சொல்லலாம். காரணங்கள் எல்லோரும் அறிந்ததுதான். விசயம் அதுவல்ல. மாயா படத்தில் நிஜ(!) பிசாசாகவே நடிக்கிறார் நயன்தாரா.

செப்டம்பர் 17ம் தேதி ரிலீஸ்.

“எனக்கு ரொம்ப பிடிச்ச.. டிப்ரண்ட்டான கேரக்டர்” என்ற நயன், அதற்கு மேல் அந்தப்படத்தைப் பற்றி சொல்ல மறுத்துவிட்டார்.

ஆனால்  இன்னொரு விசயத்தை வெளிப்படையாக சொன்னார்.

“சின்ன வயசிலிருந்தே அரவிந்த்சாமியின் ரசிகை நான். கேரளாவில் அவர் படம் ரிலீஸ் ஆன அன்றே பார்த்துவிடுவேன். அவருடன் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. தனி ஒருவன் படத்தின் மூலம் அந்த கனவு நிறைவேறியது..” என்று ஏகத்துக்குப் புகழ்கிறார் அரவிந்த்சாமியை.

ம்.. ஹீரோ ஜெயம்ரவியை விட்டுவிட்டு வில்லன் அரவிந்த சாமியை புகழ்கிறார்..!