காட்பாதரும், நாயகனும்
காட்பாதரும், நாயகனும்

“விருதைத் திருப்பித் தருவது தேசத்தை அவமானப்படுத்தும் செயல்” என்று எல்லோருக்கும் புரிகிற மாதிரி உரத்துச் சொல்லிவிட்டார்  “உலக நாயகன்” பட்டத்தை தமிழகத்துக்குள் பெற்றுவிட்ட கமல்ஹாசன்.    அந்த தமிழக “உலக: நாயகனி்ன் உலக குரு மார்லன் பிராண்டோ, தனது விருதை திருப்பிக்கொடுத்திருப்பது தெரியுமா?

அப்போகலிப்ஸ் நவ், ஆன் த வாட்டர் பிரண்ட் உட்பட பல படங்களில் நடித்த  ஹாலிவுட்  நடிகரான இவர்,  இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவர்,  பாராண்டோ.

“பிராண்டோ இறந்த பின்பு தான் எல்லோரும் முதல் இடத்திற்கு வர முடியும் என்று குறிபிட்டார்” சக நடிகரான ஜாக் நிகோல்சொன். இப்படி நடிகருக்கெல்லாம் நடிகராக விளங்கியவர் பிராண்டோ.

நம்ம ரசிகர்களுக்குச் சொல்வதென்றால்,  மணிரத்னம் 87 ல்  ‘நாயகன்’ படத்தை எடுத்தார் அல்லவா? அதில் கமல் நடிப்பை அற்புதம் என்று புகழ்ந்து நெகிழ்ந்தோம் அல்லவா…?

1972ம் வருடம் வெளியான “தி காட் பாதர்”என்ற  ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பிதான்,  “நாயகன்”.  முன்னதில் நடித்தவர் , மார்லன் பிராண்டோ. அவரது நடிப்பைத்தான் முடிந்தவரை நாயகன் படத்தில் “காப்பி பேஸ்ட்” கமல்.

சரி இப்படி நடிப்பே வாழ்க்கை, உயிர் என பிராண்டோ போன்ற ஹாலிட்காரர்களின் கனவு, லட்சியம் எல்லாம், ஆஸ்கர் விருதுதானே!

ஆனால் தன்னைத் தேடி வந்த ஆஸ்கர் விருதை நிராகரித்தார்  பிராண்டோ.

1954ஆம் ஆண்டு இவர் நடித்த ஆன் த வாடர்பிரன்ட் என்ற திரைப்படத்திற்காக  ஆஸ்கார் விருது இவருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அந்த விருது வழங்கும்  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையேறிய பிராண்டோ, “அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் மிக மோசமாக இழிவாக நடத்தப்படுகிறார்கள். இதற்கு கண்டனம் தெரிவித்து ஆஸ்கார் விருதை புறக்கணிக்கிறேன்” என்று அறிவித்தார்.

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படாமலேயே ஆஸ்கார்நாயகன் என்று கொண்டாடப்படும் கமலுக்கு இந்த வரலாறு தெரியுமா?

  • சுந்தர்