விருச்சக ராசி
விருச்சக ராசி

கருணை குணம் கொண்ட விருச்சக ராசி அன்பர்களே..
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்குப் பதினோராம் வீட்டில் அமர்ந்து எடுத்த காரியம் யாவிலும் வெற்றிகளை அளித்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்கிறார். இதுவும் நல்ல காலம்தான். சவாலான வேலைகளையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். . உங்களது ஆளுமைத் திறன் கூடும். . சிலர் பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள். சுற்றுவட்டாரத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். .
தாம்பத்யம் இனிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். . பிள்ளைகள், பெற்றோர் மனம் அறிந்து நடப்பார்கள். உற்றார் உறவினர் வீட்டு சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் திரும்பத் தருவீர்கள். சிலருக்கு சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. ஆபரணச் சேர்க்கையும் சிலருக்கு நடக்கும்.
08.01.2016 முதல் 10.03.2016 வரை அரசாங்க ரீதியான காரியங்கள் எளிதாக முடியும்.  அரசியல்வாதிகள் உதவி கிடைக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று திரும்ப கிடைக்கும். சிலர், சொந்த வீடு கட்டும் பணியைத் துவங்குவார்கள். 11.03.2016 முதல் 15.11.2016 வரை… கடன் வசூலாகும். சிலர் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழியில் பொருள் வரவு உண்டு. திடீர் வெளியூர் பயணங்கள் உண்டாகும். அடகில் இருந்த நகையை மீட்பீர்கள்.
வழிபாடு: திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர் ஸ்ரீகாளத்தீஸ்வரரை வணங்குங்கள்.
 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து வீண் குழப்பங்களையும், உறவினர்களின் பகையையும் தந்த கேதுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்கிறார். இதனால் மனம் தெளிவாகும் எடுத்த காரியத்தை திட்மிட்டு முடிப்பீர்கள். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையை அறிந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்திருந்த உயர்கல்வி அல்லது உத்யோகம் குறித்து நல்ல தகவல் வரும். 4-ல் ராகு நிற்பதால் தாயாருக்கு உடல் உபாதை ஏற்படும். அவருடன் கசப்புணர்வு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பெற்றவரின் மனம் நோகாமல் நடந்துகொள்ளுங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை உரிய காலத்தில் செலுத்துவிடுங்கள்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை பணவரவு திருப்திகரமாக இருக்கும். மாற்றுமொழி பேசுபவர்களால் நன்மை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டு. சிலர், பூர்வீகச் சொத்தை விற்று புது சொத்து வாங்குவார்கள். 13.07.2016 முதல் 20.03.2017 வரை குடும்பத்தில் மனக்கசப்பு, வீண் விவாதம் ஏற்படும். மறதியால் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். உடல் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டிய காலகட்டம் இது. .
பொதுவாக இந்த ராகு, கேது மாற்றம் சில சிக்கல்களை அளித்தாலும், ஓரளவு நற்பலன்களைக் கொடுக்கும்.