வியாபம்: மர்ம மரணம் 46

Must read

 

 

 

aa

வியாபம் மர்ம மரணம்

போபால்:

த்தியப் பிரதேச மாநிலத்தில் தொழில் முறை தேர்வு வாரியம் நடத்திய நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வைப்பதாகச் சொல்லி, பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது தெரியவந்தது.

இந்த ஊழலில் ஆளுநர் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிந்தது.

இந்த நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், வழக்குடன் தொடர்புடையவர்கள், புகார் கொடுத்தவர்கள் என அடுத்தடுத்து பலர் மர்மமான முறையில் மரணமைடைந்தார்கள். இது நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்தது. இதுவரை 45 பேர் மர்மமாக இறந்திருக்கிறார்கள்.

vyapamஇந்த நிலையில் வழக்கை கடந்த ஜூலை மாதத்திலிருந்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இப்போது வியாபம் தொடர்பான இரண்டு தேர்வுகளில் பார்வையாளராக பணியாற்றியவர் விஜய் பகதூர்   மர்மமான முறையில் மரணடைந்துள்ளார்.

ஓய்வு பெற்ற ஐஎப்எஸ். அதிகாரியான இவர், ஒடிசா மாநிலம் ஜர்சுகுடாவில் ரயில் தண்டவாளம் அருகில் இறந்து கிடந்தார். கடந்த 15ம் தேதி போலீசார் அவரது சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதன் பிறகுதான் அவர் ‘வியாபம்’ விவகாரத்தில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.

வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்ந்து மர்மமாக மரணமடைந்து வருவது தொடர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

More articles

Latest article