1
மலையாள பூமியில் பேக்கரி கடை நடத்தி வருரும்  விஜய்,  குழந்தை நைனிகாவை  பாசமாக வளர்த்துவருகிறார். எந்தவித வம்புதும்புக்கும் போகாத அமைதியான வாழ்க்கை. இவரது உதவியாளர்  மொட்டை ராஜேந்திரன்.  குழந்தை நைனிகா படிக்கும் பள்ளியில் டீச்சராக  இருக்கும்  எமி ஜாக்சனுக்கு விஜய் மீது ஒரு இது.
ஒருகட்டத்தில்.. யெஸ்.. பிளாஷ்பேக்கில் விஜய் டெரரான போலீஸ் அதிகாரியாக இருந்தது தெரியவருகிறது. (எத்தனை படத்துலய்யா சாமி!)
படத்தின் முதல்பாதி முழுவதும் விஜய் ரசிகர்களை மனதில் வைத்து, அதிரிபுதிரியாக காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர் அட்லி.  விஜய் அறிமுகம் ஆகும் சீனில் ஆரம்பித்து,  ஒவ்வொரு காட்சியிலும் அவரது ஸ்டைலைப் பார்த்து தியேட்டரில் விசில் பறக்கிறது.
‘ஜித்து ஜில்லாடி’ பாடலில் விஜய்யின் ஸ்டைல் மூவ்மெண்ட் ரொம்பவே ரசிக்கவைக்கிறது.   அதே போல  சுவிங்கத்தை ஸ்டைலாக தட்டி வாயில் போடும் காட்சிகளும் ரசிகர்களைக் கவர்கிறது.
3
குழந்தை நைனிகா சிறப்பாக நடித்திருக்கிறார். விஜய்யோடு அந்த குழந்தை அடிக்கும் லூட்டி அனைவரையும் ரசிக்க வைக்கும். இருவருக்குமான பாசக் காட்சிகளையும் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள்.
எமி ஜாக்சன் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார்.  துவக்கத்தில் ஒருசில காட்சிகள்தான் வருகிறார். ஆனால் படத்தின் பிற்பாதியில் அவருக்கு நிறைய வாய்ப்புகளை அளித்திருக்கிறார்கள். அவரும் தன் பங்கை உணர்ந்து செய்திருக்கிறார்.
மொட்டை ராஜேந்திரனுக்கு இது பேர் சொல்லும் படம்.   விஜய்க்கு சமமாகவே இவருடைய கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கியிருக்கிறார் அட்லி.
2
வில்லன் கதாபாத்திரத்தல் வரும் இயக்குநர் மகேந்திரன், அசத்தியிருக்கிறார்.  யதார்த்தமாக நடிப்பு.  கையை ஆட்டிக்கொண்டு அவர் பேசும் மேனரிசம் ரசிக்கவைக்கிறது.
சமந்தாவுக்கு ரொம்ப வேலை இல்லை. அழகு காட்டிவிட்டு போகிறார்.
ஜி.வி.பிரகாஷூக்கு இது ஐம்பதாவது படம். பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. படமாக்கி விதமும் அருமை.  ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்சுக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில்  விஜய் ரசிகருக்கு ஒரு புல் மீல்ஸ் ‘தெறி’!