விஜய் 60 பட இயக்குநர் அறிவிப்பு!

Must read

Actor Vijay @ Snehithudu Movie Stills
Actor Vijay @ Snehithudu Movie Stills

ட்லீ இயக்கும் படத்திற்கு பிறகு அடுத்து உருவாக இருக்கும் விஜய்யின் 60வது படத்தை யார் இயக்கப்போவது என்கிற ஒரு கேள்விக்கு மில்லயன் பதில்கள் வந்தன. (இதுதான் மில்லியன் டாலர் கேள்வியோ?)

“கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஜே.சூர்யா மோகன் ராஜா சமுத்திரகனி என பலரும் அவரிடம் கதை கூறினர” என்று தகவல் வெளியானது. அதன் பிறகு, “எஸ்.ஜே.சூர்யா கன்பார்ம்” என்றார்கள், அடுத்து, “கார்த்திக் சுப்புராஜ் விஜய்யை சந்தித்தார். ஆகவே அவர்தான்” என்று பேச்சு பரவியது.

ஆனால் இப்போது, இயக்குநர் பரதன்தான் இயக்கப்போகிறார் என்று அதிகார பூர்வமாகவே அறிவித்திருக்கிறார்கள்.

இதில் காமெடி என்னவென்றால், பெரும்பாலானவர்கள் கார்த்திக் சுப்புராஜ்தான் அடுத்த படத்தை இயக்கப்பகிறார் என்று நம்பினார்கள்.

ஆனால் இப்போது பரதனை அறிவித்திருப்பது விஜய் ரசிகர்களை வருத்தத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.

காரணம், விஜய்யின் “மிகப்பெரிய”, தோல்விப்படமான, “அழகிய தமிழ் மகன்” படத்தை இயக்கியவர் இந்த பரதன்தான்!

“அவர் சொன்ன கதையும், களமும் விஜயையும் அவர் மனைவி சங்கீதாவையும் ஈர்த்துவிட்டது. ஆகவேதான் அவர் செலக்ட் செய்யப்பட்டார்” என்கிறது விஜய் வட்டாரம்.

எப்படியோ.. நாமும் ஒரு வாழ்த்து சொல்லிடுவோம்! வாழ்த்துகள்!

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article