விஜய்யை வறுத்தெடுக்கும் வாட்ஸ் அப் ஆபாச பேச்சு!

Must read

vijay-sad

வாட்ஸ் அப்பில் இப்போது வைரலாக பரவி வருவது ஒரு பெண்மணியின் ஆபாச பேச்சு. அந்த பெண்மணி,  நடிகர் விஜய்யை உலகில் உள்ள அத்தனை வார்த்தைகளிலும் வறுத்தெடுக்கிறார். கேட்பதற்கே காது மட்டுமல்ல, உடலே கூசுகிறது. அந்த பெண்ணின் குரலைக் கேட்கும்போது கல்லூரி படிக்கும் வயதுள்ளவர் என தெரிகிறது.

பதிலுக்கு விஜய் ரசிகர்கள் சிலரும், அஜீததையும் அந்த (முகம் தெரியாத) பெண்ணையும் ஆபாச வார்த்தைகளால் ஏசும் ஆடியோவும் உலாவருகிறது.

அடுத்தாதா தன்னைப் பற்றி விமர்சித்த ஆடியோவுக்கு பதில் அளித்து அடுத்த ஆடியோவில் பேசியிருக்கிறார் அந்த பெண்மணி.

அதில் யாரோ அவரை மிரட்டி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க வைத்ததுபோல அழுதுகொண்டே பேச்சை ஆரம்பிக்கிறார்.    ஆனால் அடுத்த நிமிடத்தில் ‘இப்படிலாம் மன்னிப்பு கேப்பேன்னு நெனச்சீங்களாடா! என்று சிரித்துக்கொண்டே மறுபடி முதலில் இருந்து வசைபாட துவங்குகிறார்.

 

இந்த ஆடியோக்களை கேட்ட முகநூல் அன்பர் ஒருவர், ” அந்த பெண்மணியின் வசைபாடலை (!) கேட்டு வருடக்கணக்கில் வாயைக்கட்டி வைத்த எனக்கே  யாரையாவது வசைபாடவேண்டும் என்ற உள்ளக்கிளர்ச்சியை ஏற்பட்டு விட்டது” என்று பதிவிட்டிருக்கிறார்.

அந்த ஆடியோவை கேட்டால் விஜய்யே கதறி அழுதுவிடுவார். அந்த அளவுக்கு ஆபாச பேச்சு.

விஜய் – அஜீத் சண்டை இன்னும் எந்த அளவுக்குப் போகுமோ?

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article