விஜய்யை மிரட்டிய சிம்பீப் ரசிகர்கள்! கமுக்கமா இருக்கும் சினி போராளிஸ்!

Must read

CRvzjYDUcAAw81b

உகாண்டாவில் உப்புகருவாடு கிடைக்கலைன்னா இங்கே பிரஸ்ஸை கூட்டி பட்டைய கிளருப்பிருவாங்க சில சினிமாக்காரங்க.. குறிப்பா ஆர்.கே.செல்வமணி, அமீர், சேரன், தங்கர்பச்சான், கரு.பழனியப்பன், மிஷ்கின் அப்படின்னு ஒரு போராளி குரூப்பே இருக்கு…

ஆனா, சிம்பீப் பத்தி இவங்க ஏதும் வாயத் திறக்கலை..!

ஆனா நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், பாடலாசிரியரும் நடிகருமான பா.விஜய்னு ரொம்ப சிலபேரு மட்டும் மனசு பொறுக்காம சிம்பீப்ப கண்டிச்சாங்க!

இப்ப பா.விஜய்க்கு மிரட்டல் விடுத்திருக்காங்களாம், சிம்பீப் ரசிகர்கள்!

பல நம்பர்லேருந்து போன் பண்ணி, பா.விஜய்யை (சிம்பீப் பாணியிலேயே) ஆபாசமா திட்டியிருக்காங்க. அப்படி பேசினவங்கள்ள சிலபேரு, “ சிம்புவோட தலைமை ரசிகர் மன்றத்திலிருந்து உங்கள் போன் நம்பரைக் கொடுத்து உங்களை அசிங்கமாகத் திட்டச் சொன்னாங்க”னு சொல்லியிருக்காங்க!

இது எப்படி இருக்கு?

பா.விஜய், “ஆபாச பாட்டு பத்தி விமர்சனம் பண்ணக்கூடாதா? மிரட்டல் போன் எண்கள் எல்லாத்தையும் குறிச்சி வச்சிருக்கேன்.. இன்னிக்கு எந்த காலும் வரலை.. வந்தா உடனே போலீஸ்ல புகார்தான்” என்கிறார்.

சரி, இப்படி சக சினிமாக்காரர மிரட்டியிருக்காங்களேனு, இதுக்கூட சினிமா புரட்சியாளருங்க குரல் கொடுக்கலியே..!

ஹூம்..!

 

 

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article