222

மூகவலைதளங்கில் நடிகர் விஜய்யை பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் மற்றும் கிராபிக்ஸ் படங்கள் பகிரப்பட்டதையடுத்து அவரது ரசிகர்கள் காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். அது குறித்து வாரமிருமுறை இதழ் ஒன்றில் செய்தி வந்தது. அதில், “இது போன்ற விமர்சனங்கள் வருவதற்கு அஜீத்துக்கு நெருங்கிய ஒருவர்தான் காரணம். அவர் சமீபத்தில்கூட, தனது ட்விட்டர் பக்கத்தில் யாரோ புகுந்து செய்தி வெளியிட்டதாக புகார் கொடுத்தார்” என்று விஜய் ரசிகர்கள் குற்றம்சாட்டுவதாக செய்தி வெளியாகியிருந்தது.

அப்படி புகார் கொடுத்தவர் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா என்பவர். ஆகவே அவரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்க முற்பட்டோம். போனை எடுத்த அவரது உதவியாளர், “நாங்கள் அதுபோல் செய்யவில்லை.. யாரோ எதுவோ எழுதிட்டுப்போறாங்க” என்று தொடர்பை துண்டித்தார். இது குறித்து நேற்று செய்தி வெளியிட்ட நாம், சுரேஷ் சந்திராவையும் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டு பிரசுப்போம் என்று சொன்னோம்.

அதன்படி அவரை தொடர்புகொண்டபோது, “நான் ஒரு ஊழியன். சிலரிடம் வேலை பார்க்கிறேன். நான் ஏன், விஜய்யை விமர்சிக்க பணம் தர வேண்டும்? விஜய், அஜீத் இருவருமே எனக்கு சகோதரர் போன்றவர்கள்” என்றார்.