விஜயகாந்த் இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார்

Must read

vijay345
தமிழகத்தில் வரும் மே 16-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணிக் கட்சிகள் கூட்டு சேர்ந்து போட்டியிடுகின்றன.
மக்கள் நல கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே பலகட்ட பிரச்சாரத்தை முடித்து விட்ட நிலையில், கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை கும்மிடிப்பூண்டியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார்.
கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகில் பஜாரில் நடைபெறும் கூட்டத்தில் விஜயகாந்த் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து பேசுகிறார்.

More articles

Latest article