விஜயகாந்த்தை அவமானப்படுத்துகிறார் வைகோ : டி.கே.எஸ். இளங்கோவன்

Must read

tks e
மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், ம.ந.கூ. ஒருங்கிணைப்பாளருமான வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. தே.மு.தி.க.வுக்கு 80 தொகுதிகளும் 500 கோடி ரூபாயும் தி.மு.க. தருவதற்கு முன்வந்தது என்ற செய்தி ஒரு நாளிழில் வெளிவந்துள்ளது. அது உண்மையுமாகும்’’என்று கூறினார்.
திமுக கூட்டணிக்கு வருவதற்காக, தேமுதிகவுக்கு திமுக ரூ.500 கோடி கொடுக்க முன்வந்ததாக வைகோ குற்றம்சாட்டியிருப்பதற்கு திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர், ‘’திமுக மீது ஆதாரமில்லாத தரம்தாழ்ந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. திமுகவை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விஜயகாந்த்தை அவமானப்படுத்துகிறார்’’ என்று கூறியுள்ளார்.

More articles

Latest article