விஜயகாந்தை பலரும் கேலி செய்வது ஏன்?: பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் கருத்து

Must read

b
 
விஜயகாந்த் மேல் இருக்கும பயம் காரணமாகவே அவரை அளவுக்கு மீறி சிலர் கேலி செய்கிறார்கள்”  என்று எழுத்தாளர் பாலகுமாரன் தனது முகநூல் பதிவில் எழுதியிருக்கிறார்.
அந்த பதிவு:
“இத்தனை ஏகடியம் விஜயகாந்தை நோக்கி எதற்கு? அத்தனையும் பயம்.
உங்கள் கேலி பதிவுகள் அவர் மீது ஒரு கவனத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்துகின்றன.. அவர் தன் பிராசாரத்தை ஆரம்பிக்கவேயில்லை. உங்க எதிர்ப்புகளால் அவர் ஆதரவு பிராசரத்தை ஆரம்பித்து விட்டீர்கள்.
இன்னார்தான் முதல்வராக தகுதி உள்ளவர் என்று யாரால் சொல்ல இயலும். எட்டி உதைத்தும் கிள்ளியும் மேலே விழுந்தும் புரட்சி தலைவர்
இறுதிஊர்வலத்தில் ஜெயல்லிதாவை அரசியலாளர்கள் படுத்தியபாடு…உலகம் அறியுமே சிங்காசனம் ஏறினாரே. எவர் சூழ்ச்சி தடுக்க முடிந்தது. பத்திரிகைகள் அவருக்கு எதிராக இருந்தன. எல்லாம் ஒடிந்து போயிற்று.
அளவுக்கு மீறிய கேலி உங்கள் ஆத்திரத்தைக் காட்டும். ஆத்திரக்கார்ரை மக்கள் மதிப்பதில்லை.
கோபம் வேறு ஆத்திரம் வேறு.
வைகோ பாலிமரை மறுத்து வெளியேறியது கோபம். உங்ககூட மனுஷன் பேசுவானா என்கிற வெளிப்பாடு.
நான் கூட்டணி ஆதரவாளர் இல்லை . பொது ஜனம். என்னைப்போல் பலர் இருக்கக்கூடும். கவனம்!”

More articles

2 COMMENTS

  1. மிகச்சரியான விளக்கம்.. நானும் அந்த வகையறாதான்.. இதே ரீதியிலான பதிலைத்தான் வாட்ஸப் நண்பருக்கு விளம்பினேன்..

  2. வைகோ பாலிமரை மறுத்து வெளியேறியது கோபம் — அப்படியா? அப்போ அவர் 500 கோடி என்று இன்னொருத்தர் மேலே குற்றம் சாட்டியபோது அந்த உணர்ச்சிக்குப் பேர் என்ன?
    விஜயகாந்தை யாருமே கேலி செய்ய வேண்டிய அவசியம் இல்லை ஐயா. அவர் பேசுவது. நடப்பது, செய்வது போன்றவற்றை சும்மா பார்த்தாலே போதும். சிரிப்பு தானாக வரும். பிற தலைவர்களைக் கிண்டலடிக்கும் போது தங்களது சொந்த வாசகங்களைச் சேர்த்திருப்பார்கள். ஆனால் இவர் விஷயத்தில் அதற்கு அவசியமே வைப்பதில்லை. கிண்டல் செய்பவர்களில் பலரும் பொதுஜனம்தான் ஐயா. பயம் எதற்கு?
    உங்களுக்கு யாராயாவது பிடிக்கவில்லை என்றாலோ அல்லது யாராயாவது பிடித்து விட்டாலோ அதற்காக மற்றவர்களைக் குறை கூற வேணாம் — அடிப்படை இல்லாமல்

Latest article