தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க. பேனரை அகற்றச் சொன்னாலும் சொன்னார், அவருகுக எதிராக தமிழகம் முழுதும் பொங்கி  எழுந்துவிட்டார்கள் அ.தி.மு.கவின் ரத்தத்தின் ரத்தங்கள்!

விழுப்புரத்திலும் தங்கள் எதிர்ப்பை காட்ட,  விஜகாந்தின் உருவ பொம்மை எரிக்க  முடிவு செய்தார்கள்.    உருவபொம்மைக்கு தீவைக்கும்பொழுது  ர.ர. ஒருவரின் வேட்டியில் தீ பற்றிக்கொண்டது . அவ்வளவுதான், அதுவரை,  ஆக்ரேஷமாக  குரல் கொடுத்துக்கொண்டிருந்தவர்கள், துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓட்டமெடுத்தார்கள்.

இந்த காமெடிக்கூத்துகளை பார்த்த பொது மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்!

(நன்றி: நியூஸ் 7 தொலைக்காட்சி)