astrology_symbol-satyam1
(02.03.2016முதல் 08.03.2016 வரை..  [மாசிமாதம் 19புதன்கிழமை முதல் மாசி மாதம் 25ம்தேதி செவ்வாய்கிழமை வரை)

தங்கள் பலன் அறிய உங்கள் ராசியின் பெயர் மீது கிளிக் செய்க !

மேசம் ராசி நேயர்களே
சந்திரன் எட்டாம் இடத்திலும், ராசியதிபதி எட்டாம் இடத்திலும் இருக்கின்ற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது புதன்கிழமை முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் அன்று மட்டும்கவனமாக இருக்கவும்.
மூன்று கிரகங்கள் சனிபகவானை சேர்த்து எட்டாம் இடத்தில் இருக்கின்றன. இக்காலகட்டத்தில் தொழில்ரீதியாக முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள்   தொழில் சில இழப்புகளை சந்திக்கநேரிடும் கவனம் தேவை.   உடன் இருப்பவர்களால் ஏமாற வாய்ப்பு உண்டு
ஐந்தில் வியாழன்,ராகு குழந்தைகள்ரீதியாக சில செலவுகள்வரலாம் சளிசம்பந்தப்பட்ட தொந்தரவுகள் இருக்கும்    குழதெய்வ வழிபாடு நன்மை தரும்.
பத்தில் சுக்கிரன் இருப்பது நன்மைதீடிர் வரவுகள் நன்மை பயக்கும். பதினொன்றில் சூரியன்,புதன்,கேது இருக்கிறது இச்சேர்க்கையார் பாதிப்பு இல்லை ஆனால் தேவையில்லாதஅலைச்சலை கொடுக்கும் .. இந்தவாரம் மிக பொறுமையாக செல்வது நல்லது..
சனிக்கிழமை சனிபகவான் விநாயகர் ஆஞ்சநேயரை வழிபட்டு அர்ச்சனை செய்யவும் !!
ரிஷப ராசி நேயர்களே…!
சந்திரன் ஏழிலும், ராசியதிபதி ஒன்பதில்கோணம் பெற்று இருக்கிற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது.  இது நல்லஅமைப்பு தொழில் நன்றாக இருக்கும்  புதிய முயற்சிகளில் ஈடுபட்டுவெற்றி காண்பீர்கள்  குழந்தைகள் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள்.  உத்தயோகம் செய்வோர் மேலதிகாரிகின் பாராட்டுக்களை பெறுவர்
நான்கில் இருக்கும் குரு,ராகு சேர்க்கை தாய் க்கி சில உடல் அசௌகரியங்களை ஏற்படுத்தும் கவனம் தேவை தாயின் உடல் நிலையில் தாங்களும் தூரேதேசம் செல்கையில் வாகனத்தில்கவனமுடன் பயணிக்கவும்
ஏழில் சந்திரன்,சனி,செவ்வாய் சேர்க்கை  இல்லறத்தில் குழப்பங்களை உண்டுபன்னும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது  மனைவி பெயரில் சில சொத்துக்கள் வாங்கும் எண்ணம் இருந்தால் இந்த வாரம் வேண்டாம். .
ஒன்பதில் சுக்கிரன் தனலாபத்தை உண்டு பன்னும் தொழில் எதிர்பாரா லாபங்களைஈட்டும் வராதுஎன்ற நினைத்த பணம் இந்த வாரம்வந்து சேரும்
பத்தில் சூரியன்,புதன்,கேது சேர்க்கை தூரதேச ஆண்மீக பிரயாணங்களை ஏற்படுத்தும்.  புதிதாக கோவில் கட்டுவதற்கு நிதி உதவி அளிப்பீர்கள்.
வியாழன்,வெள்ளி கிழமைகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் புதிய முயற்சிகளை அன்று தவிருங்கள்.  ஞாயிற்று கிழமை ராகுகாலத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டுஅர்ச்சனை செய்யுங்கள்.!
மிதுன ராசி நேயர்களே..!
சந்திரன் உங்கள் ராசிக்கி ஆறிலும், ராசியதிபதி ஒன்பதிலும் இருக்கிறார்கள்.  வரவு பெருகும். ஆனால் அவை அனைத்தும்  விரயங்கள்ஆவதறகான வாய்ப்புகள் அதிகம் எனவேமுறையாக செலவு செய்ய கற்றுக் கொள்ளுங்கள்
மூன்றில் குரு ,ராகு சேர்க்கை அலைச்சல் மேல் உள்ள தொழில் புரிபவர்களுக்கு தொழில் நன்றாக இருக்கும்   புதிய தொழில் தொடங்குவீர்கள் கூட்ட தொழில் தவிர்ப்பது நல்லது.
ஆறில் மூன்று கிரகங்கள் இருப்பது எதிரிகளால் தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும் அதனால் பாதிப்புகள் இல்லை
எட்டில் சுக்கிரன் பெண்கள் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும் அவர்கள் மூலமாக பணம் விரயம் ஆவதற்கவாய்ப்பு உண்டு கவனம் தேவை.
ஒன்பதில் சூரியன் புதன் கேது சேர்க்கை தந்தை வழி சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் விலகும்  அதில் நீங்கள் விட்டு கொடுத்து செல்வீர்கள்
இந்த வாரம் ஏற்றம் இறக்கம் நிறைந்ததாக இரக்கும் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனம் தேவை
இந்த வாரம் சனிக்கிழமை சக்கரத்தாழ்வாரை வழிபடுவது நன்மை பயக்கும்….
கடக ராசி நேயர்களே…!
சந்திரனும், ராசியதிபதியும் ஐந்தில் கோம் பெற்று இருக்கிறார்கள்  இது நல்ல அமைப்பு இந்த வாரம் பல நல்ல மாற்றங்கள்உங்கள்வாழ்வில் நடைபெறும்.  ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்செய்வீர்கள் நன்றாக இருக்கும்.   சமுதாயத்தில் உங்கள்அந்தஸ்து கூடும்  முக்கிய பொறுப்பு ஒன்று தேடிவரும்   அதனால் பல பெரிய மனிதர்ளின் அன்பை பாராட்டுக்ளை பெறுவீர்கள்.
இரண்டில் குரு,ராகு சேர்க்கை சில வரவுகள் வரும்  நற்பலன்கள் கிட்டும். ஏழில் சுக்கிரன் சிலருக்குபுதிய வாழ்க்கை துவங்கும்   திருமணத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். சுபகாரியங்கள் ஒன்றன் பின்றாக நடக்ககூடிய காலகட்டங்கள். எனவே எதிலும் அச்சம் இன்றி துணிந்துஈடுபடுங்கள் வெற்றி உங்களுக்கே..
எட்டில் சூரியன்,கேது சேர்க்கை மட்டும் சாதகம் இல்லாமல் இருக்கிறது. ஆகவே சூர்ய பீரிதி செய்வது நல்லது. இந்த வாரம் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பயணடையுங்கள்.!
சிம்ம ராசி நேயர்களே….!
சந்திரன் நான்கிலும், ராசியதிபதி ஏழில் கேந்திரம் பெற்றிருக்கிற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது.  தொழில் நன்றாக இருக்கும், சில நட்புகளின்மூலமாக புதிய முயற்சிகளில்ஈடுபடுவீர்கள் அதில் வெற்றிபறுவீர்கள்.  அரசாங்க உதவியுடன் பெரிய நிறவனம் நிறுவும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுவார்கள்.
ஜெனமத்தில் குரு,ராகு சேர்க்கை நீங்கள் நம்பியவர்கள் உங்களை ஏமாற்றகூடும் எச்சரிக்கை தேவை  நான்கில் மூன்று கிரகங்களின் சேர்க்கை நன்மைதான்   பணவரவுகள் நன்றாகஇருக்கும்  தாய் வழி சொத்துகள் உங்கள்பெயரில் முடியும்
ஆறில் சுக்கிரன் தேவையில்லாத செலவுகளை குறைத்து கொள்வது நல்லது
ஏழில் மூன்று கிரகங்கள் சேர்க்கை மனைவிக்கு மருத்துசெலவுகளை கொடுக்கும் அறுவை சிகிச்சை செய்யும் நிலைகூட ஏற்படலாம் கவனம் தேவை..
இந்த வாரம் சனிக்கிழமை ராகுகாலத்தில் பைரவரை வழிபடவும்..!!
கன்னிராசி நேயர்களே…!
சந்திரன் மூன்றாம் இடத்திலும் உங்கள்ராசியதிபதி ஆறிலும் இருக்கின்றார்கள். இரண்டு கிரகங்களுமே மறைவு ஸ்தானத்தில் இருக்கின்றன. எனவே இந்தவாரம் புது முயற்சிகளைில்ஈடுபட வேண்டாம் சிலரது ஆலோசனைகளை புறம்தள்ளுவது நல்லது இல்லையேல் தொழில் சில இழப்புகள் ஏற்படும் ஐந்தில் சுக்கிரன்
இதுவரை தடைபெற்றுவந்த இடம் இந்த வாம் நல்ல விலைக்கிவிற்க வாய்ப்பு உண்டு
ஆறில் மறைந்த புதன் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்கும் விளையாட்டுதுறையில் சிறந்து விளங்குவார்கள்    பன்னிரன்டில் குரு ,ராகுசேர்க்கை  பழைய கடனை கட்டுவீர்கள்அதேவேளையில் பழைய பாக்கி ஒன்றும்வரவாகும்
இந்த வாரம் சனிபகவானைவழிபடுங்கள்.!
துலாம் ராசி நேயர்களே..!
சந்திரன் இரண்டிலும், ராசியதிபதி நான்கில் கேந்திரமும் பெற்றிருக்கிது இது நல் அமைப்பாகும்   பொருளாதர நிலை நன்கு இருக்கும் தொழில் புதிய மாற்றங்களை,இடம் மாற்றங்களைஉண்டு பன்னுவீர்கள் அது நல்ல பலன்களை தரும்.
தனஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் இருப்பதால் குறுக்குவழியில் லாபத்தைஈட்டவே விரும்புவீர்கள். நான்கில் சுக்கிரன் புதிய புதிய ஆடம்பர பொருட்கள வாங்கி மகிழ்வீர்கள் ஐந்தில்இருக்கும்சூரியன் புதன் கேது சேர்க்கை  தந்தைவழியில் சில மகிழ்ச்சிகரமான செய்திகளை கொண்டு வரும்.
குழதெய்வ வழிபாடு நன்மயளிக்கும்  பதினொன்றில் குரு,ராகுசேர்க்கை  அரசியலில் உங்களக்குஒரு தனி இடத்தை பெற்றுதரும்.. திடீர் புகழ்ந்துசேரும்..
வெள்ளிகிழமைசுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபடவும்.!!
விருட்சக ராசி நேயர்களே..!
இந்த வாரம் சந்திரனும், உங்கள் ராசியதிபதி செவ்வாயும் உங்கள் ராசியிலயே இருக்கிறார்கள்.   இவர்களுடன் சனிபகவானும் இனைகிறார்..  தேவையற்ற பதட்டம் இருக்கும்.  எதிலும்பொறுமையாக நிதானமாக இருப்பது செயல்படுவது நல்லது
மூன்றில் சுக்கிரன் தொழில்ரீதியாக இது நன்மையளிக்கும், தொழில் சார்ந்த புதிய கருவிகள் வாங்குவீர்கள்.  நான்கில் சூரியன் புதன் கேது சேர்க்கை இடமாற்றங்களை ஏற்படுத்தும்
தாங்களாகவே தொழில் ரீதியாக இடமாற்றங்களை உண்டுபண்ணினாலும் நன்மை தான்.. பத்தாம் இடத்தில் குரு ராகு சேர்க்கை  சட்டவிரோதமான தொழில்செய்வோம் என சிலர்உங்களை அனுகலாம்  அதை தவிர்த்திருங்கள் இல்லையேல் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்
இந்த வாரம் திங்கள்கிழமை சந்திரபகவானை வழிபடுங்கள் அர்ச்சனை செய்யுங்கள்
தனுசு ராசி நேயர்களே…!
இந்தவாரம் சந்திரன் மறைந்தும், ராசியதிபதி ஒன்பதில் வக்கிரம் பெற்று இருக்கிற நிலையில் இந்தவாரம் துவங்குகிறது..  சில காரியங்களை மிகுந்த யோசனையுடன்தான் அனுகுவீர்கள்ஆனாலும் அதில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு எனவே முக்காயமுடிவுகளை ஒத்தி போடுவது நல்லது..
குழந்தைகள் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள் முடிந்தளவு மாணவர்களை விடுதியில் இருந்து படிக்க வைப்பது குடும்பத்திற்கும், மாணவர்களுக்கும் நல்லது…
இரண்டில் சுக்கிரன் எதிரிகளும் நண்பர்கள் ஆகும் தருணம்.   மூன்றில் சூரியன் புதன் கேு சேர்க்கை ஏற்படுவதால்  எதிலும் துணிச்சலோடு ஈடுபடுவீர்கள் அதில் நிதானமாகசெயல்படுவதுவெற்றியை தரும்.
ஒன்பதில் குரு,ராகு சேர்க்கை தந்தைவழி உறவுகளிடம் விட்டுக் கொடுத்து செல்வதுநைல்லது
இந்த வாரம் வியாழக்கிழமை குருபகவானை வழிபட்டு அர்ச்சனை செய்யவும்
மகர ராசி நேயர்களே…!
சந்திரனும், சனிபகவானும் லாபஸ்தானத்தில் இருக்கிற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது  இது ஒரு நல்ல அமைப்பு தொழில் நன்றாக இருக்கும், பணவரவுகள் நன்றாக இருக்கும்.புதிய வீடு,வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்
ராசியலயே சுக்கிரன் இருப்பது சமுதாயத்தில் ஒரு மதிப்புமிக்க மரியாதையாக விளங்குவீர்கள் இரண்டில் சூரியன்,புதன் கேது சேர்க்கை கலைத் துறையில் உள்ளவர்களுக்கு  மிகசிறப்பானதாக அமையும்.. புதிய புதிய வய்ப்புகள் உருவாகும்
எட்டாம் இடத்தில் இருக்கிற குரு,ராகுைசேர்க்கை தான் இல்லற துனைவர்களுக்கு மருத்துவ செலவுகள் கொடுக்கவாய்ப்புஉண்டு   உடல் நலத்தில் கவனம் தேவை.
சனிக்கிழமை தோறும் விநாயக பெருமானைவழிடுவது சிறப்பைத்தரும். !
கும்ப ராசி நேயர்களே..!
சந்திரனும் , ராசியதிபதி சனி பகவானும் பத்தாம் இடத்தில் இருக்கிற வேளையில் இந்த வாரம் தொடங்குகிறது.   கோச்சார கிரகங்கள் வழுப்பெற்றுள்ளதால் இந்த வாரம் மிகச்சிறப்பாகஇருக்கும் .. தொழில்,பொருளாதாரம் இரண்டுமே நல்ல நிலையில் இருக்கும்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும் நீண்டகாளமாக பிரிந்திருந்த உறவினர்கள் கசப்புகளை மறந்து ஒன்றுசேரக்கூடும்..
சூரியன் புதன் கேது கிரகசேர்க்கைகள் ஜென்மத்திலயே இடம் பெற்றிருப்பது நன்மைதான் எதையும் எதிர் கொண்டு வெற்றி பெறும் ஆற்றலை கொடுக்கும் ஏழில் குரு  சேர்க்கை மட்டும்சாதகமாக இல்லை   இந்த கிரகங்களுக்கு அர்ச்சனகள் செய்யவும்.
பத்தில் மூன்று கிரகங்கள் இருப்பது எதிர்பாராத பணவரவுகளை ,புதிய தொழில்வாய்ப்புகளை உண்டுபன்னும்..
இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயர வழிபடவும் .
மீனராசி நேயர்களே..!
சந்திரன் ஒன்பதிலும் ,ராசியதிபதி ஆறில் வக்கிரம் பெற்ற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது சந்திரன் திக்பலமாக இருப்பதால் இந்த வாரம் மிகச்சிற்பாகவே இருக்கும். ஆறில் குருராகு சேர்க்கை தொழிலில் போட்டிகள் இருந்தாலும் அதில் தாங்களே வெற்றிபெறுவீர்கள் தனஸ்தானாதிபதி செவ்வாய் ஒன்பதில் கோணம் பெற்றிருப்பதால் பொருளாதாரம் நன்றாகஇருக்கும்
லாபஸ்தானத்தில் சுக்கிரன் இருந்து அந்த ஸ்தானதிபதி பதினொன்றில் இருப்பதும் மிகுந்த நன்மையளிக்கும்  தொழில் அபார வளர்ச்சியை கொடுக்கும்.
பூமி சம்பந்தப்பட்ட தொழில் புரிபவர்கள் அதிக லாபத்தை ஈட்டுவார்கள் பன்னிரன்டில் சூரின் புதன் சேர்க்கை  விரயங்களை உண்டு பன்னினாலும் அனைத்தும் சுப விரயங்களாக இருக்கும்இந்த வாரம்
சிவன் வழிபாடுமிகுந்த நன்மையளிக்கும்

Goto Top