மேஷம்

குடும்பத்துல ஹாப்பி ஹாப்பி சுப நிகழ்ச்சிங்கள்ளாம் நடக்கப்போகுதுங்க. வாக்கினிலே இனிமை வேண்டும்னு பாரதியார் சொன்னதை நீங்க நிறைவேத்தறீங்கன்னு நல்ல பெயர் வாங்குவீங்க. நல்ல ஃப்ரெண்ட்ஸ் நல்ல அட்வைஸ் செய்து நல்ல வழி காட்டுவாங்க. எனவே உங்க லைஃப்ல இந்த வீக் நல்ல விஷயங்கள் நடக்கும். வயிறு சம்பந்தமான பிராப்ளம்ஸ் வந்தாலும் உரிய நடவடிக்கையை ஒடனே எடுப்பீங்க. சரியாயிடும். செல்வாக்கு அதிகரிக்கும்.  ஒரு சிலருக்கு எதிர்பார்த்த மாறுதல் ஏற்படும். செய்துவரும் தொழிலால் வெளியூருக்கு பயணம் ஏற்படும். வசதி வாய்ப்பும், செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்துல நல்ல விஷயம் ஒண்ணு நடந்தேறும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு வெளிச்சத்திற்கு வரும். அரசு வழியில் தடைப்பட்ட வேலை நடக்கும். யாருக்கோ குடுத்த கடன் வகைல வரவேண்டிய பணம் வரும். தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கெடைக்கும். வியாரத்தில் இருந்த தடை விலகும்.

ரிஷபம்

மனசுல நல்ல எண்ணங்களும் கருணையும் பூக்கும். வழிபாட்டு இடங்களுக்குப் போய் வருவீங்க. பக்தி மார்க்கத்தில் இன்டரஸ்ட் ஏற்படும். குழந்தைங்க வயிற்றில் ஐஸ்கிரீம் வார்ப்பாங்க. அவார்ட்ஸ்.. ரிவார்ட்ஸ்.. பிரைஸஸ்.. பாராட்ஸ் என்று அவங்களுக்குக் கெடைக்கும் எல்லாம் உங்களைப் பெருமிதப்படுத்தும். உங்களோட ஹஸ்பெண்ட் அல்லது ஒய்ப்புக்கு நல்ல நியூஸ் வரப்போகுது. அவர்/ அவங்க சந்தோஷப்படும்போது உங்களுக்கு ஆட்டமேட்டிக்காய் சந்தோஷம் வரும்ல. இதுவரை உங்களுக்கிருந்த சங்கடம் விலகும். ஒங்களோட எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பெரியோரின் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வருவீங்க. வரவேண்டிய பணம் வரும். அதுவும் எப்பிடி? ரொம்ப காலம் கழிச்சு உங்களை வந்தடைஞ்சு சர்ப்பிரைஸ் பண்ணும். புதிய ஆரம்பம் ஒன்று உண்டு.

மிதுனம்

செலவு வரும்தான். ஆனா டென்ஷனான செலவு கெடையாதுங்க. ஹாப்பி செலவு. சுப செலவு. அம்மாவுக்கு குட் நியூஸ் வரும். பிரமோஷன்.. இன்கிரிமென்ட்.. பாராட்டு.. பிறந்த வீட்டு சீர்.. நகை.. என்று எதுவாகவும் இருக்கலாம். நீங்க மாணவர் என்றால் உங்களுக்குப் பாராட்டும் வெற்றியும் உண்டுங்க. ஏதாச்சும் எக்ஸாம் எழுத நினைச்சு பெண்டிங்கில் போட்டிருந்தீங்கன்னா உடனே எழுதுங்க. புது வாகனம் வாங்கறது பகல் கனவா இருந்துக்கிட்டிருந்த நெலை மாறி.. இப்போது பலித்த கனவா ஆயிடும். குழந்தைகளிடம் கண்டிப்புக் காட்டி அவங்களுக்கு நன்மை செய்வீங்க. இப்போ அவங்க முறைச்சாலும் சீக்கிரத்தில் உங்க அருமையைப் புரிஞ்சுக்குவாங்க என்பதால் பிடிச்ச பிடியை விடாதீங்க. என்றைக்கோ போட்டு வைச்சிருந்த முதலீடுகள் இப்போ வளர்ந்து குட்டி போட்டு உங்களை சந்தோஷத்துல ஆழ்த்தும் புது விஷயம் கத்துப்பீங்க.

கடகம்

இதுக்குப் பெரிசா பாராட்டெல்லாம் இப்போதைக்குக் கெடைக்காது. எதிர்பார்க்கவும் வேணாம். இப்போதைக்குன்னுதான் சொன்னேனே தவிர .. காலம் கடந்து அவங்க சொல்லிச் சொல்லிப் பாராட்டி சந்தோஷப்படுவாங்கன்னும்  நினைவுல வெச்சுக்குங்க. குழந்தை பாக்கியம் இல்லாதவங்களுக்கு  அந்த சந்தோஷம் இதோ இதோ. அதே மாதிரிக் கல்யாணத்துக்கு வெயிட் பண்ணிக்கிட்டிருந்தவங்களுக்கும்.. ரொம்ப நாளாக் கல்யாணம் ஆகலை என்கிற ஏக்கம் உள்ளவங்களுக்கும் ஹாப்பி.. இன்று முதல் ஹாப்பி.  குழந்தைக்கான ஏக்கம் தீரும் நாள் வெகுதொலைவில் இல்லை.  பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விரய ஸ்தானாதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் அரசு ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டுச் சங்கடங்களிலிருந்து தப்பிப்பீங்க. புதிய விஷயங்கள் கத்துப்பீங்க. புதிய வைராக்யம் பிறக்கும்.

சிம்மம்

ஆபீஸ்ல..பிசினஸ்ல ஏ..கப்பட்ட பிரஷர் இருந்தாலும்.. சாப்பிடவும் தூங்கவும் நேரம் இல்லாம உழைப்பீங்கன்னாலும்.. வெற்றியும்.. லாபமும் நன்மையும் இருக்கும் என்பதால ஆபீஸ் ஒங்களோட  ஃபேவரைட் இடமா இருக்கும். `பாரின்லேந்து குட் நியூஸ் வரும்.  என்ஜாயி. வெளிநாட்ல உள்ள நண்பர்கள் நல்ல கிஃப்ட் வாங்கி வந்து உங்களை மீட் பண்ணுவாங்க. ஹாப்பியாயிடுவீங்க. சூப்பர்ல? பெண்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் இனக்கமான நிலை உண்டாகும். சிறு சிறு பிரச்னைகளால் பிரிந்திருந்தவர்கள் இப்போது ஒன்றிணைவீர். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும்.குலதெய்வ வழிபாடு கட்டாயம் செய்யுங்கள். அறிவாற்றல் வெளிப்படும். தடைப்பட்ட வேலை நடந்தேறும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சொத்து வாங்கும் கனவு நனவாகும். வாழ்க்கைத் துணைக்கு நன்மை உண்டாகும். தாமதங்கள் நீங்கும்.

கன்னி

டாடி உங்களுக்கு ஒரு நல்ல விஷயம் வெச்சிருக்காரு. அவருக்கும் வாழ்க்கைல சந்தோஷத் திருப்பம் உண்டு. திடீர் லக் உங்களை வந்து சூழ்ந்துக்கிட்டுத் திக்குமுக்காட வைக்கும். வெளிநாட்டுக்குப் போக சான்ஸ் கெடைக்கக்கூடும். ஆபீசில் உங்களை ஆன்சைட் அனுப்ப வாய்ப்பு உள்ளது. சின்னச்சின்னதா பயணங்கள் உண்டு. அவற்றால் பெரிய பெரிய சந்தோஷம் உண்டு. உறவினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். ஆபீஸ்ல இருந்த நெருக்கடி விலகும். உற்சாமுடன் செயல்படும் நிலை ஏற்படும். தடைப்பட்டிருந்த வேலை நடந்தேறும். முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய பொறுப்பு கெடைக்கும். தொழில், வியாபாரத்துல ஏற்பட்ட தடை விலகும். அரசு விவகாரம் சாதகமாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது உங்களிடமே உதவி கேட்டு வருவாங்க. பல கால சந்தேகம் ஒண்ணு தீரும்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 13 முதல் அக்டோபர் 16 வரைசந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்

நண்பர்களை சந்திப்பீங்க.. சாதாரண நண்பர்களை அல்ல. உயிர் நண்பர்களை. ரொம்ப…. வருஷங்களாப் பிரிஞ்சிருந்த ஃப்ரெண்ட்ஸை.. சந்திக்க ஏங்கிய நண்பர் களை.. தோழிகளை/ சிநேகிதிங்களை மீட் செய்வீங்க. ஆரோக்யம் கண்ணா மூச்சி காட்டிருக்கி டிருந்ததில்லையா? அது வாலைச்சுருட்டிக்கிட்டு நல்லபடியா உங்க காலடி யில் உட்கார்ந்து நிம்மதி தரும். புது வேலை ஜாயின் செய்ய ஆர்வம் உள்ளவங் களுக்கு சக்ஸஸ் உண்டு. நோய் நொடிகளால் பாதிக்கப் பட்டிருந்த குடும்பத்தினர் ஒருத்தரோட உடல்நிலை முன்னேற்றமடையும். பொன், பொருள் சேரும். சிறு வியாபாரி, உழைப்பாளி கள் நிலை உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். அவசியமே இல்லாத விஷயங்களுக்கு ஒங்க பொன்னான நேரத்தைச் செலவிடாதீங்க ப்பா. அப்புறம் கவலைப்பட வேணாமே. இனி வரும் காலத்தில் ஏற்படப்போகும் நல்ல விஷயம் ஒன்று பத்தி இந்த வாரம் இண்டிகேஷன் கெடைக்கும்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 16 முதல் அக்டோபர் 18 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

திடீர்னு வரவு வரும். லாபம் வரும். நீங்க எதிர்பார்க்காத நிலைல சம்பளம் கூடுதலாகும். ஆன்மிகத்துல உயர் நிலைல உள்ளவங்களோட நட்புக் கெடைக்கும். கூடப்பொறந்தவங்களோட ஒற்றுமை ஏற்படும். அவங்களால ஒங்களுக்கும் ஒங்களால அவங்களுக்கும் நல்ல விஷயங்கள் நடக்கும். மனசுல தேவையே இல்லாத கற்பனை பயங்கள் என்டர் ஆக அனுமதிக்காதீங்க. அப்டி வந்தா அதை உடனேயே தூக்கி டெலிட் செய்துடுங்க. ஒங்களோட உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். தாய்வழி உறவுகள் ஒத்துழைப்பு ஏற்படும். இதுவரை இருந்த எதிர்ப்பு நீங்கும். தொழில் போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். பெண்களுக்கு குடும்பத்துல  நிம்மதி கெடைக்கும். பார்த்துவரும் வேலை, செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 18 முதல் அக்டோபர் 20 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு

பெரிய பெரிய ஆபத்துக்கள்லேயிருந்து வெளியே வந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கிட்டிருக்கீங்க கங்கிராட்ஸ். பிரதர்ஸ் சிஸ்டர்ஸ்க்கு ஏற்பட்ட கஷ்டத்தைத் தீர்க்க உதவி செய்வீங்க. அது உங்க கடமை. ஆனா அதைச் செய்துட்டு உடனே மறந்துடுங்கப்பா. சொல்லிக் காட்டாதீங்க. ஓகே? உங்க ஃப்ரெண்ட்ஸ் ஒங்களுக்கு உதவ செய்யப் போறாங்க. அதனால பெரிய நன்மை ஒண்ணு நடக்கப்போகுது. வாழ்த்துகள் பா. உங்க ஒட்டுமொத்த நல்வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். என்றாலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்துவேறுபாடுகள் எழாமப் பார்த்துக்கணுங்க. இந்த வாரத்தோட பிற்பகுதியில் உங்க தன்னம்பிக்கை கூடி சாதனைக்கு வழிவகுக்கும். உடன் பிறந்தவங்ககூட சின்னதாய் ஒரு பயணம் போக சான்ஸ் இருக்கு. அன்பானவங்களைப் பல காலம் கழிச்சு சந்திச்சு சந்தோ.ஷப்படுவீங்க.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 20 முதல் அக்டோபர் 22 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

பேசும்போது ஜாக்கிரதையா இருங்க. உங்க வார்த்தைகள் உங்களுக்கே ஆப்பு வைக் காம பார்த்துக்குங்க. குடும்பத்துல சின்னக் கச முச ஏற்பட நீங்க காரணமா இருந்துடா தீங்க. சண்டை ஏற்பட்டால் அதைத் தண்ணி ஊத்தி அணைக்கப்பாருங்க. நெய் ஊத்தி வளர்க்காதீங்க. குழந்தைங்க ஏதோ பெரிய விஷயம் சாதிச்சு ஒங்களைப் பெருமிதப் படுத்துவாங்க. மனசுல தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாகும். அது கர்வமாய் வடிவெடுக்காம கவனமா இருந்துக்குங்க. தொழிலில் புதிய உத்திகளை புகுத்துவதில் நீங்க வெற்றி காணலாம். தொழில் கூட்டாளிகள் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் இந்த வாரம் அனுகூலமான காலக்கட்டமாக இருக்கும். உங்க தகவல் தொடர்பத் திறன் மேம்படலாம். இந்த வாரத்தின் பிற்பகுதியில் உங்களின் புத்திசாலித்தனம் மூலம் நீங்க கல்வியில் அங்கீகாரம் மற்றும் வெற்றி பெறப்போறீங்க.

கும்பம்

அம்மாவுக்கும் உங்களுக்கும் சந்தோஷப் புரிதல் ஏற்படும். மாணவர்களுக்கு சின்ன வெற்றிகள் மட்டுமின்றிப் பெரிய வெற்றிகளும் உண்டாகும். புது வாகனம் வாங்குவீங்க அல்லது இத்தனை காலமா டிரபிள் குடுத்துக்கிட்டிருந்த வாகனத்தை முழுசா சரி செய்து நிம்மதியடைவிங்க. முன் எப்பவோ வாங்கிய கடனை ஒரு டாலர் பாக்கி இல்லாம முழுசா அடைச்சு வெற்றி காணுவீங்க. சந்தோஷப்படுவீங்க.  புதுசா லோனுக்கு மனுப் போட்டு.. அது கெடைக்காம காத்துக்கிட்டிருந்தவங்களுக்கு “ஓடியா.. உடனே வந்து வாங்கிக்கோ”ன்னு கூப்பிட்டுக் குடுப்பாங்க. சந்தோஷமாயிடுவீங்க. சாப்பாட்டு விஷயத்தால ஏற்பட்டிருந்த ஹெல்த் பிரச்சினைங்க சரியாகும். உங்க தொழிலில் சாதகமான பலன்களைப் பெற சான்ஸ் இருக்குங்க. முதலீடுகள் மூலம் நல்ல பணவரவு இருக்கும். தலைமைப் பொறுப்பு மற்றும் வழகாட்டுதலில் நீங்க சிறந்து விளங்கினாலும் சில சவாலகளை சந்திச்ச பிறகே வெற்றி.

மீனம்

சகோதர சகோதரிங்க உதவிகரமா இருப்பாங்க. ஃபேமிலியைச் சேர்ந்தவங்ககூட உல்லாசமா உற்சாகமா வெளியூர் அல்லது வெளிநாட்டுக்குப் பயணம் போவீங்க. குழந்தைங்க உங்களை அன்பா ஆதரவா கவனிப்பாங்க. கணவர் அல்லது மனைவிக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரும். அல்லது குறைந்தது உள் நாட்டுக்குள் டூர் போகச் சொல்லி ஆபீஸ்ல சொல்லுவாங்க. திடீர் அதிர்ஷமும் திடீர் வருமானமும் உண்டு. எல்லா விஷயங்களிலும் நிதானப் போக்கு இருந்தாலும் அது எல்லாமே நல்லமுறைல முடியும். இந்த வாரத்தின் இரண்டாம் பாதியில் உங்க உத்தியோகத்தில் சில மாற்றங்களை நீங்க காணலாம். தகவல் பரிமாற்றத்தின் போது நீங்க விவேகத்துடன் செயல்படுவீங்க. பணியிடச் சூழல் வசதியாக இருக்கும். தரகுத் தொகை மற்றும் போனஸ் வகையில் உங்களுக்கு பண வரவு இருக்கும். பார்ட்டி.. விருந்துக்குப் போய் மகிழ்வீங்க.