கிட்னி திருடிய டாக்டருக்கு வழக்கத்திற்கு மாறாக ஜாமீன் வழங்கிய தர்மபுரி மாவட்ட கூடுதல் நீதிபதி அன்புராஜை சென்னை உயர்நீதிமன்றம் கட்டாய ஓய்வளித்து பதவி நீக்கம் செய்துள்ளது.
 
இதுபற்றிய விவரம் வருமாறு:-
சேலம் விநாயாக மிஷன் மருத்துவமனையில்  2013 இல் நரம்பியல் நிபுணராக பணிபுரிந்தவர் டாக்டர் வி.எம்.கணேசன்.  அப்போது பெண்ணாகரத்தைச் சேர்ந்த காத்தவராயன் என்பவர் தன்னுடைய தந்தை அய்யருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிசைக்காக டாக்டர் கணேசனை அணுகி உள்ளார்.  இதற்காக டாக்டர் கணேசன் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு பெரும் தொகையை கொடுத்துள்ளார். வாங்கிய பணத்துக்காக டாக்டர் கணேசன் குழுவினர் திருட்டு கிட்னியை ஏற்பாடு செய்து அய்யருக்கு பொருத்தி உள்ளனர். ஆனால் சில நாட்களிலேயே அய்யர் இறந்துவிட்டார். இதுதொடர்பாக டாக்டர் கணேசனிடம் முரையிட்டுள்ளார். ஆனால் வாங்க்கிய தொகையில் மிகச்சிறு தொகையினை மட்டும் திருப்பித்தந்துள்ளனர்.

Dr-V-M-Ganesan
டாக்டர்.வ.ம. கணேசன்

இதனை அடுத்து காத்தவராயன் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் செய்தார். புகாரினை விசாரித்த காவல்துறையினர் டாக்டர் கணேசன் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
டாக்டர் கணேசன் பெண்ணாகரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் 2013, ஜூன் 21 ஆம் தேதி ஜாமீன் வழங்கக் கோரி மனுச்செய்தார். அம்மனுவினை மாஜிஸ்ட்ரேட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை அடுத்து தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவினை டாக்டர் கணேசன் தாக்கல் செய்தார். அப்போது மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த வணங்காமுடி இந்த  ஜாமீன் மனு மீதான விசாரணையை 2013, ஜூன் 25க்கு ஒத்திவைத்து இரண்டு நாள் விடுமுறையில் சென்று விட்டார். அந்த 2 நாட்களும் பொறுப்பு  மாவட்ட முதன்மை நீதிபதியாக கூடுதல் நீதிபதி அன்புராஜ் பணியில் இருந்தார். அப்போது அவசரம் அவசரமாக டாக்டர்  கணேசனின் ஜாமீன் மனுவினை 2013, ஜூன் 24 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து ஜாமீனும் வழங்கி விட்டார். மேலும் இதுதொடர்பாக அரசு வழக்கறிஞருக்குகூட தகவல் தெரிவிக்கவில்லை. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபப்டும் வழக்குகளின் பட்டியலிலும் இந்த ஜாமீன் மனு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதைய அரசு வழ்க்கறிஞர்  அசோகன் இந்த ஜாமீன் மனு மீது வழங்கிய அறிக்கையையும் நீதிபதி அன்புராஜ் நிராகரித்து விட்டார்.
வழக்கத்திறுகு மாறாக ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து அரசு வழக்கறிஞர் அசோகன் தனது அறிக்கையில் “ இப்படி  திடீரென ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது பற்றி அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன். ஏனெனில் அன்றைய வழக்குகள் விசாரணைப்பட்டியலில் இது இடம்பெறவும் இல்லை.யாருக்கும் இதுபற்றி தகவல் கொடுக்கப்படவும் இல்லை. எந்த முன்னுரிமையில் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது பற்றியும் சொல்லப்படவில்லை. இதுபற்றி வாதாட இந்த வழக்கை ஒரு நாளுக்காவது ஒத்தி வைக்க வேண்டும் என நீதிபதியிடன் மன்றாடினேன். ஆனால் அவர் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் டாக்டர் கணேசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் மீண்டும் பணிக்கு திரும்பிய மாவட்ட முதன்மை நீதிபதி வணங்காமுடி, ஜாமீன் வழங்கபப்ட்டது  சட்டப்படி செல்லாது என்று  கூறி ஜாமீன் உத்தரவை ரத்து செய்தார். இதனை அடுத்து டாக்டர் கணேசனை தர்மபுரி காவல்துறையினர் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இதன்பின்னர் டாக்டர் கணேசன் தலைமயில் நடைபெற்ற சிறுநீரகத் திருட்டு பற்றிய செய்திகள் 2013 ஆம் ஆண்டில் அனைத்து ஊட்கங்களிலும் பரபரப்பு செய்தியானது. டாக்டர் கணேசனின் கிட்னி திருட்டு வேலைகள் வெளிச்சத்துக்கு வந்தன. தர்மபுரி சுற்றுவட்டாரமான பள்ளிபாளையம், சங்ககிரி, குமாரபாளையம், ஈரோடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களின் சிறுநீரகங்களை மோசடி செய்து திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு சிறுநீரகம் அளித்த ஏழைகளை நோயாளிகளுக்கு உறவினர்கள் என்றும் இது வழக்கமான சிறுநீரக தானம் என்றும் வருவாய்த்துறையில் சான்றிதழ்களும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சிறுநீரக மோசடி மன்னன் டாக்டர் கணேசனுக்கு வழக்கத்திற்கு மாறாக ஜாமீன் வழங்கியது குறித்து சென்னை உயர்நீதிமன்றப்பதிவாளர் நீதிபதி அன்புராஜ்மீது விசாரணைக்கு உத்தரவிட்டார்.  தீவிர விசாரனைக்குப் பின் விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான  அனைத்து நீதிபதிகள் பெஞ்ச் , வழக்கத்திற்கு மாறாக ஜாமீன் வழங்கிய தர்மபுரி மாவட்ட கூடுதல் நீதிபதி அன்புராஜூக்கு கட்டாய ஓய்வளித்து பணி நீக்கம் செய்தனர்.
மேலூர் நீதித்துறை நடுவர் மகேந்திர பூபதி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் அன்புராஜின் இந்த பதவி நீக்கம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.