வரிவிலக்கு தேவையில்லை!: வித்தியாசமான சித்தார்த்!

Must read

 
jil
சித்தார்த்துக்கு ரொம்பவே தைரியம். பெண் கதாபாத்திரமே இல்லாத முதல் தமிழ்ப்படத்தில் நடிப்பதோடு, அதை தயாரித்தும் இருக்கிறார்.  படத்தின் பெயரும் வித்தியாசமாக “ஜில் ஜங் ஜக்”!  வரும் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
படத்துக்கான ப்ரஸ்மீட்டும் வித்தியாசம்தான்.  படக்குழுவினரை தவிர வேறு யாரையும் அழைக்கவில்லை சித்தார்த். அதோடு, படத்தில் தன்னோடு நடித்த இருவரை, “இவர்கள்தான் என் படத்தின் ஹீரோக்கள்” என்று அறிமுகப்படுத்தினார்.
“ஜில் ஜங் ஜக் தமிழ் பெயராக இல்லையே.. வரிவிலக்கு கிடைக்காதே..” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது,  “வரிவிலக்கு கிடைக்காவிட்டால் பரவாயில்லை  படத்தில் வரும் மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் பெயர் இவை.  என் படத்துக்கு உயிர் முக்கியம்.  அது இந்த டைட்டில் ஆகவே இதை மாற்றும் எண்ணம் இல்லை!” என்றார்.
வரிவிலக்கு கிடைக்கவில்லையே என வழக்கு தொடுக்கப்படும் காலத்தில், கதையின் ஜீவன்தான் முக்கியம் என்று வரிவிலக்கை மறுக்கும் சித்தார்த் துணிச்சலானவர்தான்!

More articles

Latest article