வரலட்சுமிக்கு.. கிடைக்காமலே கிடைத்த விருது!

Must read

Thaarai-Thappattai-1
டைரக்டர் பாலா இயக்கத்தில் சசிகுமார் – வரலட்சுமி நடித்த “தாரைதப்பட்டை”  வெளிவந்தபோது எதிர்மறையான விமர்சனம்தான் வந்தது. ஆனால் படத்தில் நடித்த வரலட்சுமியை எல்லோருமே வாயார பாராட்டினார்கள்.
அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார். “தேசிய விருது கிடைக்கும்” என்றும் பலர் வரலட்சுமியிடம் ஆரூடம் சொன்னார்கள். வரலட்சுமியும் தனது உழைப்புக்கு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் இருந்தார்.
ஆனால்,  தேசியவிருது கிடைககவில்லை. இதையடுத்து பலரும் வரலட்சுமியிடம் தங்களது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அவரோ, “இத்தனை பேர், எனக்கு விருது கிடைக்கும்னு நம்பினீங்களே.. இதுவே எனக்கு பெரிய  விருதுதான்” என்கிறார் புன்னகைத்தபடியே.
ஸ்போர்ட்டிவான ஹீரோயின்!

More articles

Latest article