வன்கொடுமை சட்டத்தை நீக்க கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் நடவடிக்கை

Must read

11_MADRAS_HIGH_COUR_738556f

சென்னை:

ட்டியல் மற்றும் பழங்குடி இனருக்கான வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தை நீக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி  மன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

சமூக நீதி பேரவையின் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளில் ஒருவருமான வழக்கறிஞர் பாலு, வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

பாலுவின் வழக்குக்கு எதிராக,  SC/ST மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் வாராகி போன்ற பல சமூக ஆர்வலர்கள் இந்த வழக்கில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த வழக்கு இன்று (07.03.2013 )விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு, வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தை நீக்கக் கோரிய பாலுவின் வழக்கை தள்ளுபடி செய்தது.

More articles

Latest article