0
மிழகத்தில் வங்கிகளுக்கு வரும் 25-ம் தேதி முதல் மூன்று நாட்கள்  தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
புனித வெள்ளியையொட்டி வருகிற 25-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து 26-ஆம் தேதி மாதத்தின் நான்காவது சனிக்கிழமையும், 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வருவதால் அடுத்தடுத்து மூன்று நாள்கள் தமிழகத்தில் வங்கிகள் செயல்படாது.
ஹோலி பண்டிகை 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
24-ஆம் தேதி ஹோலி என்பதால் வட இந்தியாவில் அன்று முதலே விடுமுறை.
ஆகவே,  காசோலை, வரைவோலை பரிமாற்றங்கள், பண பரிவர்த்தனைகளை நாளை மற்றும் நாளை மறுநாளுக்குள் செய்து முடித்துவிடுங்கள்.