லாரன்ஸ் மாதிரி மிமிக்ரி செய்தால் ஒரு லட்சம் பரிசு!

Must read

 
IMG-20160315-WA0067 ROBERTS69082
 
               சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி  தயாரிக்க, வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் உலகம் முழுவதும் வெளியிடும், படம் “ மொட்ட சிவா கெட்ட சிவா “    ராகவா லாரன்ஸ் நடிப்பில் சாய்ரமணி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கிறது.  
இந்த படத்தில் அம்ரிஷ் இசையமைப்பில்  ராகவா லாரன்ஸ் முதன் முறையாக  “  லோக்கல் மாஸ்  “ என்று தொடங்கும்  ஒரு பாடலை சுசித்ராவுடன் இனணந்து பாடி இருக்கிறார்.    இதே பாடலை  பாஸ்ட் பீட்டில் பாடகர் திப்புவும், பாடகி  மாலதியும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
ஸ்லோ பீட்டிலும், பாஸ்ட் பீட்டிலும் இரண்டு விதமாக பதிவு செய்யப்பட்ட இந்த இரண்டு பாடல்களும் வரும் ஞாயிறு அன்று சிங்கிள் ட்ராக்காக வெளியிடப்படுகிறது.  இந்த இரண்டு விதமான பாடல்களில் எதை மக்கள் அதிகம் விரும்புகிறார்களோ அந்த பாடல் படமாக்கப் படும்.
மோஷன் போஸ்டரும் அன்றே வெளியிடப்படுகிறது. அந்த மோஷன் பிக்சர்ஸ் பார்த்து அதில் ராகவா லாரன்ஸ் பேசிய வசனத்தை அதே மாடுலேசனில் பேசியோ, அல்லது பேசி நடித்தோ  mottasivakettasivafilm@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு  முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் அனுப்பவும். பத்து வயதிற்குட்பட்ட போட்டியாளர்கள் மட்டுமே அனுப்ப வேண்டும். அதில் எது சிறந்ததோ அதை தேர்ந்தெடுத்து அந்த குழந்தைக்கு ராகவா லாரன்ஸ் ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசு வழங்குவார். 

More articles

Latest article