ராதாரவியின் வில்லத்தனம்! : குமுறும் சூர்யா, சிம்பு!

Must read

 

radharavi-sj-simbu

நடிகர் சங்க தேர்தலில் தானும் தனது அணியும் எப்படியாவது வெற்றிபெற்றுவடி வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் ராதாரவி. சமீபத்தில் சினிமா நடனம், நாடக, நடிகர்கள் சங்கம் என்ற புதிய சங்கத்தைதொடங்கி வைப்பதற்காக  கோவை சென்றவர், “நடிகர் சங்க தேர்தலில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர்எங்கள் அணி சார்பில் போட்டியிடுகிறார்கள்” என்று கொளுத்திப்போட்டார்.

இதைக் கேள்விப்பட்ட எஸ்.ஜே.சூர்யாவும், சிம்புவும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஏற்கெனவே சிம்பு, “ எனது ஆதரவு சரத்குமார் அணிக்குத்தான்” என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுத்திருந்தார். அதோடு, “தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை” என்பதையும் வெளிப்டையாக அறிவித்திருந்தார்.

எஸ்.ஜே. சூர்யாவோ, தேர்தல் குறித்து எதுவும் பேசவே இல்லை.

“பிறகு  ஏன் இப்படி செய்கிறார் ராதாரவி” என்று குமுறிக்கொண்டிருக்கிறார்கள் சூர்யாவும், சிம்புவும்!

தேர்தல் என்று வந்தாலே தில்லுமுல்லுவும் வந்துவிடுமோ!

More articles

4 COMMENTS

Latest article