rss

ந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.தான் தற்போதைய பாஜக அரசை ஆட்டிப்படைக்கிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அதற்கேற்றாற் போல பாட நூல்களல் இந்துத்துவத்தைப் புகுத்துவது, மத சார்புக்கு எதிராக செயல்பட்ட தலைவர்களின் புகழை மறைக்கும்படியான செயல்களில் ஈடுபடுவது என்ற மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்கின்றன.

இந்த நிலையில், “ராணுவத்தில் தங்கள் அமைப்பு. நுழைவது பற்றிய ஆலோசனை கடந்த மாதம் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கரின்
முன்னிலையில் நடைபெற்றுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. முக்கிய பிரமுகர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். முடிவில், “ ஆர் எஸ் எஸ் துணை அமைப்புகளை அல்லது அவற்றின்
அறிவுஜீவிகளை ராணுவ ரீதியாக எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கான செயல்திட்டம் ஒன்றைத்  தயாரிப்பது என்று முடிவானது.

“இந்துக்களை ராணுவமயமாக்க வேண்டும். இந்திய ராணுவத்தை இந்துமயமாக்க வேண்டும் ” என்று சொன்னவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிதாமகர் ர் கோல்வால்கர் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கல்வி, பண்பாட்டு, மொழி ரீதியாக தனது இந்துத்துவ பண்பாட்டை மத்திய பாஜக அரசு புகுத்தி வரும் நிலையில், ஆர்.எஸ். எஸ்ஐ ராணுவத்தில் சேர்ப்பது குறித்த ஆலோசனை இந்தியாவின் மத சார்பற்ற தன்மைக்கு கேடுவிளைவிக்கும்.