கபாலி பூஜையில் ரஜினியுடன் ரியாஸ் (கண்ணாடி அணிந்திருப்பவர்)

“கோடி கோடியாய் சம்பாதித்த நடிகர் ரஜினிகாந்த், வெள்ள நிவாரணமாக வெறும் பத்து லட்சம்தான் கொடுக்க வேண்டுமா.. “ என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

நல்லகண்ணு
நல்லகண்ணு

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு இது குறித்து ஆதங்கத்துடன் எழுதியிருக்கும் முக நூல் பதிவை, தானும் பதிந்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பி.ஆர்.ஓ. ஆன ரியாஸ் அகமது.

அந்த  பதிவு வருமாறு:

வெறுப்புடன் எழுதுகிறேன்!!!
லாரன்ஸ் 1 கோடி குடுத்தாராம், தெலுங்கு நடிகர்கள் 10 லட்சம், 20 லட்சம்னு குடுத்தார்களாம், கோடி கோடியா சம்பாதிச்ச ரஜினி 10 லட்சம்தான் குடுத்தார்னு ஒரு குரூப் கத்திகிட்டே இருக்கு.
வளர்ச்சி திட்டத்துக்காக 4000 கோடி, 5000 கோடிநு கணக்கு காட்டிட்டு பேருக்கு ரோடு போட்டு, ஏரிய எல்லாத்தயும் கூருபோட்டு வித்த அரசுகளையும், அதிகாரிகளையும் கேள்வி கேட்க திரானி இல்ல,
இன்னும் இலவசம் எங்கின்ற பேரில் அரசு குடுக்கும் பிச்சையை வரிசைல இருந்து வாங்கிகிட்டு, இங்க வந்து நொட்டை சொல்கிறோம்.
ரஜினி எதற்காக தன் சொத்தை வாரி இரைக்க வேண்டும்.
நடிப்பது அவர் தொழில். நீ உன் சந்தோசத்துக்காக 300,400 ரூ. டிக்கெட் குடுத்து படம் பார்த்த. அவர் கோடிஸ்வரன் ஆகிட்டார். அவர் எதற்காக அதை திருப்பி குடுக்கணும். Corporate கம்பேனிகள் எல்லாம் லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதிகிறார்கள். ஒருத்தனாவது ஒரு ரூபாவவது குடுத்திருப்பானா???
Pepsi ஐ, Water bottle Freeya Sponsor பன்ன சொல்லு!
KFC ஐ எல்லொருக்கும் சிக்கன் குடுக்க சொல்லு!
சரவண பவன் ஐ தோசை சப்பாத்தி குடுக்க சொல்லு!
இவர்கள் சம்பாதிகவில்லையா???
சினிமாகாரன வெரும் சினிமாகாரனா மட்டும் பார்த்திருந்தால், தமிழகம் பல காமராஜர்களை முதல்வராக பார்த்திருக்கும். சினிமாகாரன தலைல தூக்கிவச்சி கொண்டாடியே பல பேர அரசியல்வாதியா அக்குனீங்க. இப்பொ எல்லா நடிகர்களும் ஆட்சியிலும் நல்லா நடிக்கிராங்க. தமிழன் கடைசிவரைக்கும் சொந்த நாட்டில் அகதியாகவே கிராமத்து விவசாயி கதறினாலும் கண்டுக்க நாய் கூட இல்லை. பட்டணத்து பணப் பரதேசிகளுக்கு பரிதாபம்.,.
இன்று புரியும் பணத்தை தின்ன முடியாது என்று..,.
கட்டுக்கட்டாய் பணம் உள்ளவனும் கையேந்தி நிற்கிறான்,..
செடி பிடுங்கி மரம் பிடுங்கி, கல் நட்டு கான்கிரீட் போட்டவர்கள் உணரட்டும், ஒரு பிடி சோறும் ஒரு குவளை நீரும் எவ்வளவு அவசியம் என்று.
காலம் மழையாய் மாந்தர்க்கு மதி புகட்டியே ஆகனும்.
இன்று கொட்டும் ஒவ்வொரு சொட்டு நீரும். விவசாயி விட்ட கண்ணீர்….
பிழைக்க வந்த பிச்சைகார கூட்டம் பண்டம் விற்க வந்த பரதேசி கூட்டம் எங்களிடம் வாங்கி தின்றுவிட்டு எங்களுக்கு கஷ்டத்தில் கூட உதவ மனம் வரவில்லையா? நெல்லை கங்கைகொண்டான் சிப்காடில் உள்ள கோக் பெப்சி,ATC TYRE,BOSCH,RAMCO INDUSTRIES போன்ற நிறுவனங்களில் வெள்ள நிவாரண பொருட்கள் கேட்டோம் ஓரு பிஸ்கட் கூட தரவில்லை நாங்கள் எங்கள் பசிக்கு பிச்சை கேட்கவில்லை கஷ்டபடுபவர்களுக்கு உதவிதான் கேட்டோம் இவர்கள் இந்த நெல்லை மண்ணில் இருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் ஓடஓட விரட்டி அடிப்போம் (இந்த பதிவை சோற்றில் உப்பு போட்டு சாப்டும் ஒவ்வொரு தமிழனும் ஷேர் செய்யுங்கள்): : இவ்வாறு ரஜினியின் பி.ஆர்.ஓ. ரியாஸ் கூறியிள்ளார்.

அந்த லிங்க் கீழே…

https://www.facebook.com/riaz.ahmef/posts/429546380572477?pnref=story

மேற்கண்ட பதிவில் நல்லகண்ணுவின் பெயரை குறிப்பிடாமல் பதிந்திருக்கிறார் ரஜினியின் பி.ஆர்.ஓ. ரியாஸ் அகமது. மேற்கண்ட கருத்தை முழு மனதுடன் ஏற்பதால் இப்படி செய்திருப்பாரோ என்னவோ?

போகட்டும்..  ரஜினியின் கருத்தும் இதுதானா..   ” என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லாவா” என்று பாடிவராயிற்றே ரஜினி!