ரஜினியை விடுங்க.. முருகனை நினைங்க..!

Must read

 

12400940_568096826678088_5576586672079536013_n

 
ஜினிக்கு பத்மவிபூஷன் சரியா தவறா என்ற ஆராய்ச்சியில் பத்மஸ்ரீ வாங்கிய இந்த எளிய மனிதரை யாருக்கும் தெரியவில்லை . கோவையை சேர்ந்த முருகானந்தம் பெண்களுக்கான சானிடரி நாப்கீன்களை குறைந்த செலவில் தயாரித்து வழங்கி வருவதற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது .
ஒருபுறம் பன்னாட்டு (MNC ) நிறுவனங்கள் கவர்ச்சியாக விளம்பரம் செய்து நாப்கின் வியாபாரத்தில் கோடிகோடியாய் குவிக்கிறது . இன்னொரு புறம் இந்தியாவில் இன்னும் 60 சதவீத ஏழைப் பெண்கள் நாப்கின் வாங்க வசதியின்றி பழைய துணிகளை உபயோகிக்கும் அவலம் நிலவுகிறது.
இந்த நிலையை போக்க நினைத்த முருகானந்தம் பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் குறைந்த செலவில் சுகாதாரமான நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தி வடிவமைத்தார்.அவர் தயாரித்த இயந்திரம் , நாப்கின் போன்றவற்றை முறைப்படி காப்புரிமை செய்தாலும் யாருக்கும் விற்கவில்லை.
மகளிர் அமைப்புகள் , பள்ளிகள் போன்றவற்றிற்கு லாபமின்றி இயந்திரம் , மூலப்பொருட்கள் வழங்கி பயிற்சி அளிக்கிறார் . இன்று 21 நாடுகளில் சுமார் 10000 இயந்திரங்கள் மூலம் , ஒரு கோடி பெண்கள் இவரின் சுகாதாரமான நாப்கின்களை குறைந்த விலையில் ( 1 பீஸ் 1rs,2rs ) உபயோகிக்கிறார்கள்.
ஏற்கனவே உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை டைம் பத்திரிக்கை (2014 ) தேர்ந்தெடுத்தது. இப்போது இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்துள்ளது.
வாழ்த்துக்கள் முருகானந்தம் சார்…!
விக்னேஷ் சி செல்வராஜ்

More articles

Latest article