ஜூலியர்ட்ராபர்ஸ்ட்
ஜூலியர்ட்ராபர்ஸ்ட்

ந்திய அளவில் பிரம்மாண்டத்துக்கு பெயர் பெற்றவர் டைரக்டர் ஷங்கர்தான். ஆனால் பாகுபலி மூலம் அந்த இமேஜை உடைத்துவிட்டார் இயக்குநர் ராஜமவுலி.

அதனால் ரஜினியை வைத்து தான் இயக்கும் எந்திரன் 2 படம் படத்தை மிகப் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டு வருகிறார் டைரக்டர் ஷங்கர்.

கதையை ஏற்கெனவே முடிவு செய்து, ரஜினியிடம் சொல்லி ஓ.கே.வும் வாங்கிவிட்டார் ஷங்கர். அந்த கதையை மேலும் மெருகூட்ட ஒரு டீம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளை எப்படி வைக்கலாம் என்பதற்காகவே கம்ப்யூட்டர் நிபுணர்கள்,  ஆர்ட் டைரக்டர்கள் கொண்ட குழுவும் ராப் பகலாக டிஸ்கஷனில் இருக்கிறது. அதோடு ஹாலிட் நட்சத்திரங்களில் யார் யாரை படத்தில் புகுத்தலாம், எந்த ரோலுக்கு யார் சரிவருவார்கள் என்பதை முடிவு செய்வதற்காகவே தனி குழு செயல்படுகிறது.

இதன்படி முதலில் இவர்கள் முடிவு செய்தது ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். இயக்குநர் ஷங்கரின் உறவினர் பப்பு என்பவர் அர்னால்டிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக தகவல் அடிபட்டது.

படத்தின் நாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இப்போது இன்னொரு ஹாலிவுட் நடிகையுடனும் பேசிக்கொண்டிருக்கிறார்களாம். அவர்  ஜூலியர்ட் ராபர்ஸ்ட்!

அர்னால்டு கேட்கிற சம்பளமே மலையளவு இருக்கும். இதில் ஜூலியர்ட் வேறயா என்றால் அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார்கள்.

“ஆஸ்கார் விருது பெற்ற ஜூலியர்ட் ராபர்ஸ்ட் நடித்த  “ஈட் ப்ரே அண்ட் லவ்” என்ற படத்தின் படப்பிடிப்பு சில வருடங்களுக்கு முன் இந்தியாவின் அரியானா மாநிலத்தில் நடைபெற்றது அப்போது   தர்மதேவ் என்ற சாமியாரை சந்தித்தார் .  தொடர்ந்து இந்து மத பழக்கவழக்கங்களை பின்பற்ற ஆரம்பித்தார். தனது குழந்தைகளுக்கும் இந்து மத பெயர்களை வைத்தார். இந்து மத தத்துவங்கள் குறித்து நிறைய படிக்கிறார். அவரிடம் ரஜினி குறித்தும், அவரது ஆன்மிக ஈடுபாடு, அவரது படத்தின் ரீச் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. விரைவில் நல்ல தகவல் கிடைக்கும்” என்று ஷங்கரின் யூனிட்டிலிருந்து தகவல் கசிகிறது.

“அது சரி.. ஜூலியர்ட், 40 ப்ளஸ் ஆச்சே” என்றால்,  “இங்கத்திய ஐஸ்வராய்க்கு அக்கா ஜூலியர்ட்தான்.  அதாவது வயசு ஏற ஏறத்தான் மவுசு அதிகரிக்கிறது” என்று சொல்லி அதிரவைக்கிறார்கள்.

மிரட்டறீங்களேப்பா!