ரஜினிக்கு இன்று பத்ம விருது

Must read

rajini
ஒவ்வொரு துறையிலும், சிறப்பான பங்களிப்பை அளிக்கும் பிரபலங்களுக்கு, பத்ம விருதுகள் வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தொழிலதிபர் ராமோஜி ராவ், டாக்டர் விஸ்வநாதன் சாந்தா, நடனக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி, மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பாய், நடிகர் ரஜினிகாந்த் உட்பட 10 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
இதேபோல், நடிகர் அனுபம் கெர், பாடகர் உதித் நாராயணன், பர்ஜிந்தர் சிங், சுவாமி தேஜோமயானந்தா, பேராசிரியர்கள் நாகேஸ்வர ரெட்டி, என்.எஸ். ராமானுஜ தத்தாச்சார்யா, விளையாட்டு வீராங்கனைகள் சானியா மிர்சா, சாய்னா நேவால் உட்பட 29 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகர்கள் அருணாசலம் முருகானந்தம், சீனிவாசன் , மருத்துவர் சந்திர சேகர், பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன், நடிகை பிரியங்கா சோப்ரா உட்பட 112 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வழங்க உள்ளார்.

More articles

Latest article