3

டிகர் சங்க தேர்தலில் ஓட்டுப்போட வராதது, மாரடைப்பு என்று பொய்ச்செய்தி பரவியது என்று வந்த தகவல்களால் துவண்டு போயிருக்கும் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்திருக்கிறார் அஜீத்.

ரிலீஸ் தாமதமாகும் என்று சொல்லப்பட்ட, வேதாளம் படத்தை, “தீபாவளிக்கு ரிலீஸ் செய்யணும். விரைவில் வேலைகளை முடிக்க வேண்டும்” என்று இயக்குநர் சிவாவுக்கு உத்தரவிட்டார் அஜீத். இதையடுத்து படத்தின் டப்பிங் வேலைகள் இரவு பகலாக நடக்கிறது. தனது கால் வலியையும் பொருட்படுத்தாது டப்பிங் தொடர்ந்து டப்பிங் பேசி வருகிறார் அஜீத். ஆகவே படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் 90 சதம் முடிந்துவிட்டன. விரைவில் முழுதும் முடித்து சென்சாருக்கு அனுப்பப்படும். வரும் 29 அல்லது 30ம் தேதி சென்சார் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு பக்கம் படத்தின் விற்பனையும் முழுதாக முடிந்துவிட்டது. சென்னை நகர விநியோகம்தான் கொஞ்சம் இழுத்துக்கொண்டிருந்தது. இப்போது அதுவும் நல்லபடியாக முடிந்துவிட்டது. படத்தின் சேனல் ரைட்ஸும், ஆளும் கட்சி தொ.கா.வுக்கு நல்ல விலைக்கு அளிக்கப்பட்டுவிட்டது.

இதனால் உற்சாமான அஜீத், தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக “தீபாவளிக்கு முன்பே படத்தை ரிலீஸ் செய்யலாம்” என்று சொல்லியிருக்கிறாராம்.

நவம்பர் 10ம் தேதி செவாயாக்கிழமை தீபாவளி. ஆகவே முன்னதாக 6ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம், தயாரிப்பு தரப்பு!

ஆக, அஜீத் ரசிகர்களுக்கு ஆறாம் தேதியே தீபாவளி!