யுவராஜ் சரண்! பின்னணி என்ன?

Must read

u

நாமக்கல்

மலூர் தலித் இளைஞர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜ் இன்று இன்று நாமக்கலில் சரண் அடைந்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கடந்த ஜூலை மாதம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலைவழக்கில் தலைமறைவாக இருந்த மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். ஆனால், அவர் தலைமறைவாக இருந்தபடி வாட்ஸ் அப் மூலம் அவ்வப்போது தனது பேச்சுக்களை வெளியிட்டு வந்தார்.

இந்த கொலை வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலைக்கு உயரதிகாரிகளின் டார்ச்சரே காரணம் என்றும், தன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும் அந்த பேச்சுக்களில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

தலைமறைவாக இருக்கும் யுவராஜை முதன் முதலாக patikai.com  இதழ் கடந்த செப்டம்பர் 8ம் தேதி, முதன் முதலாக பேட்டி எடுத்து வெளியிட்டது. “தவறுக்கு மரணதண்டனை தீர்வாகாது” என்ற தலைப்பில் வெளியானது.

தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிலும் அவரது பேட்டி வெளியானது வாரமிருமுறை இதழும் வாட்ஸ் அப் மூலம் அவரிடம் பேட்டி கெண்டு வெளியிட்டது.

இந்த நிலையில் இன்று நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சரண் அடைய உள்ளதாக நேற்று வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியிருந்தார் யுவராஜ்.

அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் யுவராஜ் சரண்

பின்னணி என்ன?

”இந்த நவீன யுகத்தில் ஒருவர் எங்கிருந்து பேசுகிறார் அல்லது வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்புகிறார் என்பதை அறிவது காவல்துறைக்கு சிரமமான விசயம் அல்ல. ஆனால் அதிகாரம் மிக்க முக்கிய பிரமுகர் ஒருவரின் உதவியுடனே யுவராஜ் தலைமறைவாக நூறு நாட்களுக்கு மேல் இருக்க முடிந்தது.

இதற்கிடையில் அவரை எண்கவுண்ட்டர் செய்யப்போவதாகவும் தகவல் பரவியது. ஆனால் மேற்கு மாவட்டத்தில் கணிசமாக இருக்கும் கவுண்டர் இன மக்கள் பெரும்பாலோர் ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இந்த நிலைியில் யுவராஜ் எண்கவுண்ட்டர் செய்யப்பட்டால் கவுண்டர் இன மக்களின் ஆதரவை இழக்க நேரிடும் என ஆளும் தரப்பு யோசித்ததாகவும், ஆகவே “சுமுகமாய்” பேசி அவரை சரணைடைய வைத்ததாகவும் கூறப்படுகிறது.

யுவராஜை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை ஒன்றுக்கு தலைமை ஏற்றிருந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியாவை உயரதிகாரிகள் டார்ச்சர் செய்ததாகவும், தன்னை வீழ்த்த அந்த அதிகாரிகள் திட்டமிட்டமிட்டிருப்பதாகவும் யுவராஜ் தெரிவித்திருந்தார்.

“இந்த நிலையில் யுவராஜுக்கும், காவல்துறைக்கும் மறைமுக ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

அவர் குற்றம்சாட்டிய  அதிகாரிகளில் முக்கியமானவரான டி.கே.ராஜேந்திரன் சென்னை மாநகர ஆணையராக மாற்றப்பட்டது இதை உறுதி செய்கிறது.

பொதுவாக  தலைமறைவு குற்றவாளிகள் சரணடையை முயற்சித்தால், பல இடங்களிலும் காவல் அமைத்து, முன்னதாகவே மடக்க நினைப்பார்கள் காவல்துறையினர். ஆனால் யுவராஜ், சர்வசாதாரணமாக வந்து சரணைடந்திருக்கிறார்.

மேலும், “என்னை எண்கவுண்டர் செய்துவிடுவார்கள்” என்று முன்பு பலமுறை பயந்து பேசிய யுவராஜ், இப்போது, “”சரணடைவதில் எந்த பிரச்னையும் இல்லை. , தலைமறைவாக இருப்பதால் காவல்துறையின் பெயர் கெட்டுப்போய் விடக் கூடாது என்பதால் சரண்டைகிறேன்” என்கிறார்.

இதுவும், ஏதோ ரகசிய ஒப்பந்தத்துக்குப் பிறகே சரண் நாடகம் நடந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது”  என்று பேசப்படுகிறது.

More articles

1 COMMENT

Latest article