பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி அவர்களின் முகநூல் பதிவு:
 
0
மாற்றாக வரவேண்டிய மக்கள் நலக் கூட்டணி விஜய்காந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து கூட்டு சேர்ந்திருப்பதன் மூலம், அரசியல் தற்கொலை செய்துகொள்கிறது. உங்கள் முதல்வராக நல்லகண்ணு போன்ற ஒருத்தரை அறிவியுங்கள். அல்லது யாரையுமே தேர்தலுக்கு முன்பு அறிவிக்கமுடியாதென்றால், ஆட்சிக்கு வந்ததும் நான்கு கட்சிகளும் சுழற்சி முறையில் முதலவரைத் தேர்வு செய்வோம் என்று அறிவியுங்கள் என்று மக்கள் நலக் கூட்டனி தலைவர்களிடம் நேரில் சொன்னேன்.

ஞாநி
ஞாநி

தேர்தலுக்கு முன்னால் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு கிடையாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். இப்போது விஜய்காந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருப்பது நான்கு கட்சிகளையும் மிகவும் பலவீனமானவர்களாக கொள்கைப் பிடிப்பற்றவர்களகவே காட்டுகிறது.
“யார் முதலமைச்சர் என்பதை தேர்தலுக்குப் பின்னர்தான் முடிவு செய்வோம். குறைந்தபட்ச செயல்திட்டத்தை தே.மு.தி.கவும் ஏற்கிறது” என்று விஜய்காந்த்தும் அறிவித்து கூட்டணியில் சேர்ந்திருந்தால் நியாயமாக இருந்திருக்கும்.
இப்போதைய முடிவு அவலமான முடிவு. தமிழக அரசியலில் மாற்று உருவாவதை மேலும் பத்தாண்டுகளுக்குத் தள்ளிப் போடுவதை வெற்றிகரமாக இந்தக் கூட்டணி செய்துவிட்டது!”