ம.தி.மு.க.: நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்ப்பு

Must read

12027820_10208365999375858_6065853523016341709_n

சென்னை: சமீபத்தில் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பூவிருந்தவல்லி நகர செயலாளர் இரா. சங்கர், துணை செயலாளர் து.முருகன் ஆகியோர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

சமீபத்தில் மதிமுக நிர்வாகிகள் சிலர் விலகி தி.மு.கவில இணைந்தார்கள். இந்த நிலையில், வேறு சில நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன.

கடந்த வாரம், பூவிருந்தவல்லி நகர செயலாளர் இரா. சங்கர், துணை செயலாளர் து. முருகன் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். நீக்கப்பட்டவர்கள் உரிய விளக்கம் அளித்து, தலைமை ஏற்றுக்கொண்டால் அவர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

r8அவர்களது நீக்கத்துக்கான காரணம் சொல்லப்படவில்லை. இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை விசாரிக்க சர்வதேச விசாரணை வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி போஸ்டர் அடித்ததால்தான் நீக்கப்பட்டார்கள் என்று சொல்லப்பட்டது.

இந்த நிலைியல், நீக்கப்பட்ட இருவரும், கொடுத்த தன்னிலை விளக்கத்தை ஏற்றுக்கொணடு அவர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் அவர்கள் அதே பொறுப்பில் செயல்படுவார்கள் என்றும் வைகோ அறிவித்துள்ளார்.

More articles

Latest article