உத்திரப்பிரதேச மாநிலம், சாஃபிபூர் வட்டம், டப்பவுளி கிராமத்தில் உள்ள ஒரு செங்கல்சூலையின் உரிமையாளரும் இரண்டு ஊழியர்களும் கடந்த திங்கட்கிழமையன்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு பதின்ம வயதுச் சிறுவனை அடித்து துன்புறுத்தி, மொட்டையடித்து, செருப்புமாலை அணிவித்து கழுதை மீது அமர்த்தி ஊர்வலம் அழைத்து சென்று அவமானப் படுத்தியுள்ளனர். செங்கல்சூலையை அடுத்துள்ள தங்களின் பரம்பரைச் சொத்தை அபகரிக்கும் நோக்கில் தன் மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறுவனின் தந்தையளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப் பட்டு மூவரும் கைது செய்யப் பட்டனர்.
சாஃபிபூர் வட்ட அலுவலர் செங்கல்சூலை முதலாளி வீரேந்திரக் குமார் மிஸ்ரா மற்றும் இரண்டு ஊழியர்கள் பெயரில் முதல் தகவல் அறிக்கை பதிவுச் செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.