Canara-Bank-2015-Requirement

 

மீபத்திய மழை வெள்ளத்தால், மீளா துயருக்கு ஆளாகியிருக்கிறார்கள் மக்கள். வீட்டில் இருந்த தட்டு முட்டு சாமான்களில் இருந்து, ஃப்ரிஜ், வாஷிங் மிஷின் வரை எல்லாம் காலி.

புதிதாக வாங்க வேண்டிய நிலை.. அல்லது பெரும் பொருட் செலவில் ரிப்பேர் செய்ய வேண்டிய கட்டாயம்.

உங்களுக்கு உதவ முன்வந்திருக்கிறது கனரா வங்கி. மாத சம்பளம் வாங்குபவர் என்றால், உடனே அருகில் இருக்கும் கனரா வங்கியை அணுகுங்கள்.

“மாத சம்பளம் பெறுபவர்களுக்கு 3 மாத சம்பளம் உடனடி கடனாக வழங்கப்படும். வீடு, கார் பழுது செய்ய அதன் மதிப்பில் 10 சதவீதம் தொகை கடனாக வழங்கப்படும்.  எந்த பரிசீலனை கட்டணமும் இல்லை. நுகர்வு கடன்கள் ரூ.10 ஆயிரம் வரை எந்த பிணையங்களும் இல்லாமல் வழங்கப்படும். அப்பல்லோ முனீச் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் சுகாதார காப்பீட்டுத் தீர்வுகளை துரிதமாக பெற உதவப்படும்” என்று அறிவித்திருக்கிறார் கனரா வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார்.

 

மேலும், கனரா வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு சில சிறப்புச் செய்திகளை அறிவித்திருக்கிறது.

“ஏற்கெனவே இந்த வங்கியில் கடன் வாங்கியிருப்பவர்கள் நவம்பர், டிசம்பர் மாத தவணை தாமதமாக கட்டினால்  அபராத வட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

சேதமடைந்த, தொலைந்த ஏ.டி.எம். அட்டைதாரர்களுக்கு புதியகார்டுகள் இலவசமாக வழங்கப்படும்” என்றும் கனரா வங்கி அறிவித்திருக்கிறது.