d
 
திருவனந்தபுரம்:
“‘முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஆண்கள், நான்கு திருமணங்கள் செய்யும் போது, முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணங்களை செய்யக் கூடாது,” என்று, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கமல் பாஷா கேள்வி எழுப்பியுள்ளார். 
கேரள மாநிலம், கோழிக்கோட்டில், தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: 
முஸ்லிம் தனிநபர் சட்டம், பெண்களுக்கு எதிராக கடுமையான சுமையை ஏற்றியுள்ளது. இந்த சட்டம், ஆண் ஆதிக்கத்தை முன்னிறுத்துகிறது. இதுபோன்ற  தீவிரமான  பிரச்னைகளில், மதத் தலைவர்கள் சுய பரிசோதனை செய்வது அவசியம். 
இந்த சட்டப்படி, ஒரு ஆண், நான்கு முறை திருமணம் செய்து கொள்ளலாம். இதுபோல பல திருமணங்கள் செய்து கொள்ள, முஸ்லிம் நாடுகள் கூட தடை விதித்துள்ளன. ஆனால், இந்தியாவில் இது இன்னும் நடைமுறையில் இருக்கிறது. 
பெண்களுக்கு சம உரிமை மட்டுமல்லாமல், சொத்து உரிமை உள்ளிட்ட பிற உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. கணவரின் சொத்தில், மனைவிக்கு உள்ள உரிமை குறித்து தெளிவாக வரையறுத்தால் மட்டுமே, குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
இந்த விஷயங்களில் தலையிட, உச்ச நீதிமன்றம் கூட தயக்கம் காட்டுகிறது. இந்த அநீதிகளுக்கு முடிவு கட்ட பெண்கள் முன்வரவேண்டும். பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது நியாயமற்றது.”  என்று கமல்பாஷா பேசினார்.