மீண்டும் மிரட்ட வருகிறார் சண்முகப்பாண்டியன்!

Must read

Vijayakanth-Son-Shanmugapandiyan

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த முதல் படமான  சகாப்தம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.  இப்போது அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகியிருக்கிறார் ச.பா.

வெளியூர் கட்சி நிகழ்ச்சிகள், வெள்ள சேதத்தை பார்வையிடுவது, கட்சிக்காரர்களை அடிப்பது  போன்ற பிஸியான ஷெட்யூலுக்கு இடையே, மகனுக்காக கதை கேட்கவும் நேரம் ஒதுக்கியிருக்கிறார் விஜயகாந்த்.

இந்த படத்தையும் அவரது கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கப்போகிறது. மிகக் குறுகிய கால தயாரிப்பாக இதை உருவாக்க திட்டமிட்டிருக்கிறாராம் விஜயகாந்த். அதாவது தேர்தலுக்கு முன்பு ரிலீஸ் ஆக வேண்டும் எனறு ஐடியாவாம்.

நான்கைந்து மாதத்தில் முழு படத்தையும் எடுத்து முடிக்க முடியுமா  என்பது சந்தேகம்தான்.  ஒருவேளை தேர்தலுக்கு முன்பே படத்தை வெளியிட்டு, சண்முகப்பாண்டியனையும் பிரச்சாரத்துக்கு அனுப்புவாரோ..?

 

More articles

Latest article