மீண்டும் காதல் மன்னன் ஆகிறார் அஜீத்!

Must read

 

new new

அஜீத்தின் 56வது படத்துக்கு வழக்கம்போல பெயர் சூட்டப்படவில்லை. இப்போதைக்கு, “தல56” என்று சொல்கிறார்கள்.  சிறுத்தை படத்தை இயக்கிய சிவா, ஏற்கெனவே அஜீத் நடிக்க “வீரம்”படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றி பெறவே, அடுத்ததாகவும் சிவாவுக்கு வாய்ப்பு.

முந்தைய வீரம் படத்தில், ரஜினியின் முரட்டுக்காளை படத்தின் சாயல் இருக்கும். அந்த படத்தில் ரஜினிக்கு நான்கு தம்பிகள். அதே போல வீரம் படத்தில் அஜீத்துக்கு நான்கு தம்பிகள்.

அதே போல தற்போதைய படத்தில், ரஜினியின் பாட்சா பட சாயல் இருக்கிறது என்கிறார்கள். அதில் ரஜினி ஆட்டோ டிரைவராக வருவார் இதில் அஜீத் டாக்ஸி டிரைவராக வருகிறார்.  அதில் ரஜினியின் தங்கை கதாபாத்திரம் முக்கியத்துமானது. அதே போல இதிலும் தங்கை வேடத்த்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் சிவா.

ஸ்ருதி ஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிககும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதுவரை இசை இந்தப் படத்தின் இசை பற்றி எந்த நியூஸும் வராத நிலையில் முதன் முதலாக ஒரு செய்தி கசிந்திருக்கிறது.

அதாவது, அஜீத்தும் ஸ்ருதிஹாசனும் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் டூயட் பாடப்போகிறார்களாம். அதற்கான பயண ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. சமீபமாக ரொமாண்ட்டிக்கில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத அஜீத், இந்த பாடல் காட்சியில் உருகி உருகி காதல் உணர்வைக் கொட்டவேண்டும் என்று சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் சிவா. அஜீத்தும் ஓகே சொல்லிவிட்டாராம்!

அதிரடி மன்னனாக திசை திரும்பிய அஜீத், மீண்டும் காதல் மன்னன் ஆகிறார்!

More articles

3 COMMENTS

Latest article