முருகர் கோவிலுக்கு சென்றுவிட்டு வழிபடாமல் வந்தவர்களை பற்றிய செய்தி திகிலூட்டுவதாகவே உள்ளது.
திருவிளையாடல் – 1
திருசெந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றிருந்த கனிமொழியிடன் சாமீ தரிசனம் செய்துவிடலாமே என்று உடன் இருந்தவர்கள் சொல்லியபோது , தந்தை கடிந்துகொள்வார் என்று மறுத்துவிட்டு வந்துவிட்டார். பிறகு சில நாட்களிலேயே 2ஜி வழக்கில் திகாருக்கு திடீரென்று உள்ளே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
திருவிளையாடல் – 2
காஞ்சிபுர மடத்தை சேர்ந்த ஜெயேந்திரன் வடபழனி கோவிலுக்கு ஒருமுறை வருவதாக தகவல் வந்ததையடுத்து பூர்ண கும்பத்துக்கு ஏற்பாடு செய்யபட்டது. ஆனால் வந்தவரோ வாகனத்தில் அமர்ந்தபடியே கும்பத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு அப்படியே முருகனை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டாராம். அதன் பிறகு சில நாட்களிலேயே அவரும் கொலை வழக்கில் களி தின்றது தனிக்கதை.
திருவிளையாடல் – 3
இன்று மதிமுக கட்சியை சேர்ந்த வைகோ அவர்கள், கட்சிக்காரரின் திருமணத்தில் பங்குகொள்வதற்காக கோவிலினுள்ளே வந்தார். அப்போது அங்கிருந்த ஒரு பக்தகோடி முருகனை தரிசித்துவிட்டு செல்லுங்கள் என்று சொன்னபோது, ஒரு முறைப்பாக பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டாராம். இதனால் அங்கிருந்தவர்கள் அண்ணனுக்கு அடுத்து என்னாகுமோ என்ற கவலையில் மூழ்கியுள்ளனர்.
Anbalagan Veerappan