Tape_Recorder_open

புயல் கட்சியிலிருந்து விலகுவதாக ”உயர்ந்த மலை” ஊடகக்கார் அறிவித்தது இப்போதுதான். .

“ஆனால் அதற்கு முன்பே அவர் விலகிய நிலையில்தான் இருந்தார்” என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். அவர்கள் சொல்வது இதுதான்:

“கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்துக்கு அவர் சென்ரே ரொம்ப நாளாயிற்று. புயல் கட்சியுடன் “கூட்டாக” இருக்கும் சிறுத்தைகள், வெளியேறுகிறர்கள் என்று பத்து நாட்களுக்கு முன்பாகவே ஊடகக்காரரின் தினசரியில் செய்தி வந்தது. அப்போதே ஓரளவு வெளியில் தெரிந்த விசயம் ஆகிவிட்டது”

கட்சிக்காரர்கள் சிலர், “ எங்கள் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என்றுதானே, கோடிக்கணக்கில் சந்தா வசூலித்துக் கொடுத்தோம். இப்போது எங்கள் கட்சிக்கு ஆதரவு இல்லை என்றால், சந்தாவை திருப்பித்தர வேண்டும்” என்று பேசி வருகிறார்கள்.

ஊடகக்காரர் தரப்பில் என்ன சொல்கிறார்கள்?

”ஊடகங்கள் புறக்கணிக்கின்றன என்ற வருத்தம் புயல் தலைவருக்கு உண்டு. இந்த நிலையில்தான் கட்சிக்கு வந்தார் “உயர்ந்த மலை” ஊடகக்காரர்.

தலைவரின் பேச்சுக்களுக்கும், அவர் கட்சியின் கூட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஒளிபரப்பினார். புயலும், ஊடகக்காரருக்கு,கட்சியில் பொறுப்பு கொடுத்தார். இருவருக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருந்தது.

இந்த நிலையில் “அவசர” நாளிதழுடன் புயல் தலைவருக்கு ஊடல் ஏற்பட்டது. அவரது செய்திகள் புறக்கணிக்கப்பட்டன. ஏற்கெனவே ஊடகங்கள் தன்னை புறக்கணிப்பதாக வருத்தத்தில் இருந்த தலைவர், உடனடியாக நாளேடு கொண்டு வர விரும்பினார்.

அதை செயல் படுத்தும் முயற்சியில் இறங்கினார் ஊடகக்காரர். தன் சொந்த முயற்சியில் பல இடங்களில் இருந்து முதலீட்டுக்கான தெகையை ஏற்பாடு செய்தார்.

கட்சிக்காரர்களிடம் இருந்து தலைவரும் சந்தா வசூலித்துக் கொடுத்தார். ஆனால் மொத்த முதலீட்டை ஒப்பிடும் போது அது பெரிய தொகை அல்ல. ஆனாலும் நாளிதழ் துவங்குவதில் ஊடகக்கார்ர தீவிரமாக இருந்தார்.

இந்த நிலையில் “அவசர” நாளிதழின் அதிபர், தலைவரை சந்தித்து பேசினார். இருவருக்குமான ஊடல் முடிவுக்கு வந்தது. தலைவரின் செய்தி “அவசர” நாளிதழில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டது.

ஆகவே “புதிய நாளிதழ் ஆரம்பிக்க வேண்டாம். பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று ஊடகக்காரரிடம் தலைவர் சொல்லியிருக்கிறார். ஊடகக்காரரோ, நாளிதழுக்காக தான் நிறைய முதலீடு செய்துவிட்டதை சொல்லியிருக்கிறார். ஆனாலும் நாளிதழ் வேண்டாம் என்பதில் தலைவர் உறுதியாக இருக்க… இருவருக்கும் இடையே விலகல் ஆரம்பித்தது” என்கிறார்கள் ஊடககாரர்கள் தரப்பினர்.

 

மேலும், “சந்தா அளித்தவர்களுக்கு அதில் குறிப்பிட்டிருக்கும் காலம் வரை நாளிதழ் அனுப்புவோம்” என்றும் ஊடகக்காரர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.

“கட்சி ரீதியாகத்தான் சந்தா வசூலித்திருக்கிறார்கள். ஆகவே இது குறித்து நிர்வாகிகள்.. குறிப்பாக தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும். அவர் என்ன சொல்கிறார் பார்ப்போம்” என்கிறார்கள் கட்சியினர்.