Zombies
மிழின் முதல் “சோம்பி” திரைப்படம்” என்ற அறிவிப்புடன் வெளியாகியிருக்கிறது, ஜெயம் ரவி நடித்த மிருதன்.
ஏதோ ஒரு வைரஸால் தாக்கப்பட்டும் மனிதருக்கு மிருக குணம் வந்துவிடும். அவர்கள் பிறரைக் கடித்துக் கொல்வார்கள்.
இந்த மிருக மனிதர்கள்தான் சோம்பி.
சோம்பிகளை வைத்து ஹாலிவுட்டில் வெளியான முதல் படம், “வொய்ட் சோம்பி” (White Zombie ). இது  1932-ம் ஆண்டு வெளியானது.   அதற்குப் பின்  நூற்றுக்கணக்கான  சோம்பி படங்கள் வெளியாகிவிட்டன.
நார்வே மொழியில் 2009-ம் ஆண்டு “டெட் ஸ்னோ”  என்ற சோம்பி படம் வெளியானது.
பாலிவுட்டன் முதல் சோம்பி படம், “கோ கோவா கான்”  சையிப் அலிகான் நடித்திருந்தார்.
தமிழில் முதல் சோம்பி படம், “மருதன்”
சரி, இந்த சோம்பி படங்களுக்கு எங்கிருந்து நாட் பிடித்தார்கள் சினிமாக்காரர்கள்?
உயிரோடு இருக்கும் மனிதனை, பிணம் போல் ஆக்கி, மீண்டும் அவனை உயிரோடு கொண்டுவரும் ஆப்பிரிக்க மந்திர கலைக்கு வூடு (Voodoo)   என்று பெயர்.
அதாவது, உயிருள்ள ஒரு மனைதனை மருந்து மாயங்களால்  பேச்சு மூச்சின்றி,  இதய மற்றும் நாடித்துடிப்புகள் இன்றி ஜடமாக மாற்றிவிடுவார்கள் மந்திரவாதிகள்.
வெளியுலகைப் பொறுத்தவரை அவன் இறந்தவன் தான். அவனை மருத்துவர் பரிசோதித்தாலும், உதட்டைப் பிதுக்கி, உச் கொட்டிவிட்டு போய்விடுவார்.
“இறந்த” அந்த மனிதனை புதைப்பார்கள் அல்லவா.. புதைக்கப்பட்ட அவனை மீண்டும் தோண்டி எடுப்பார்கள் மந்திரவாதிகள்.  எடுத்தவுடன், அவனுக்கு ஏதோ மருந்து கொடுப்பார்கள்.
அவன் இயங்க ஆரம்பித்துவிடுவான். ஆனால் சுயமாக அல்ல.  பொத்தானை அனுப்பினால் இயங்கும் கனிணி போல, சொல்வதைச் செய்வான். பசி தூக்கம் இன்றி அடிமையாக உழைப்பான்.
இதுதான் நிஜ(!) சோம்பி.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள  ஹைதி நாட்டில் இப்படிப்பட்ட சோம்பிகள் நிறைய உண்டு. இது குறித்து ஆராய்ச்சி செய்ய விரும்பி அங்கு சென்றார் அமெரிக்க ஆராய்ச்சியளாரான வேட் டேவிஸ்.
1982-ம் ஆண்டு அங்கு சென்றவர், அங்கேயே , சில வருடங்கள்  தங்கி ஆராய்ச்சிகளை செய்தார்.
மனிதர்களை சோம்பிகளாக்குவது, ஆப்பிரிக்க மந்திரவாதிகளிடம் இருந்த “சோம்பி பவுடர்”தான் என்பதை கண்டுபிடித்தார்.  ஹைதி நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பலவகையான சோம்பி பவுடர்களை சேகரித்து ஆராய்ச்சி செய்தார்.
சோம்பி பவுடர் மூன்று வகைப்படும்..
‘பஃபர்’ என்ற விஷ மீனைக் கொண்டு தயாரிக்கப்படும் சோம்பி பவுடர், முதல் வகை.   இரண்டாவது   வகை கடல் தவளை அல்லது ஹைலா மரத் தவளையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.  மூன்றாவது இறந்த மனிதனின் எலும்புகளிலிருந்தும் பிற கழிவுகளிலிருந்தும் தயாரிக்கப்படுவது
இந்த மூன்று வகை சோம்பி பவுடர்களிலும்  வேறு சில நச்சுத் தாவரங்கள், விலங்குகளின் கழிவுகள், பல்லி, சிலந்தி, தேள், கண்ணாடித் தூள் போன்ற பல பொருள்களும் கலக்கப்படுமாம். .
ரொம்ப எஃபக்டிவான சோம்பி பவுடர் என்று  டேவிஸ் கூறுவது, பஃபர் மீனிலிருந்து தயாரிக்கப்படும் சோம்பி பவுடரைத்தான்.  அந்த மீனில் ‘டெட்ரோடோடாக்ஸின்’ என்ற கொடிய நச்சு உண்டு.  அது  மனிதனின் ரத்தத்தில் கலந்து விட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும். அதாவது  ரத்த வாந்தி, நுரையீரல் பாதிப்பு என பலவகை பாதிப்புகள்.  நாடித் துடிப்பு   ‘பிண  நிலை’க்குக் கொண்டு சென்றுவிடும். ஆனால், அந்த நபரால் தன்னைச் சுற்றி நடப்பதை உணர முடியும்.  ஆனால் அதற்கு எதிர்வினை காட்ட முடியாது
இது குறித்தெல்லாம் விரிவாக எழுதி  The Serpent and the Rainbow   என்ற தலைப்பில் 1985-ம்  வருடம் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்  டேவிஸ்.  வேறு பல கட்டுரைகளும் எழுதியிக்கிறார்.
ஜெர்மன்  சர்வாதிகாரி ஹிட்லர், தனக்கென சோம்பி படையை உருவாக்க விரும்பினார். அது தோல்வியில் முடிந்தது.
ஆமாம்.. “தி ப்ரதர் ஹூட் ஆஃப் டெத்”   என்ற பெயரில் சூனியக்காரர்கள் கொண்ட  ரகசியக் குழுவை உருவாக்கியிருந்தார் ஹிட்லர் அந்த குழுவில்  சுமார் நாற்பது  மந்திரவாதிகள் இருந்தார்கள்.
அந்த மந்திர குழுவைக்காண்டு,  பல்லாயிரக்கணக்கான “நாஜி சோம்பி”களை உருவாக்க ஹிட்லர் திட்டமிட்டார். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால் இந்தத் தகவல் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.
ஆனால் ஒன்று சோம்பிகளைத்தேடி நாம் எங்கும் செல்ல வேண்டியதில்லை.
சொந்தமாக சிந்திக்காது, சொன்னதைச் செய்யும், அடிமையாக இருக்கும்… இப்படிப்பட்ட “சோம்பி மனிதர்கள்” இங்கேயே நிறைய பேர் உண்டே!
சுந்தா.