மலேசிய பிள்ளையார் கோயிலில் “கபாலி” ரஜினி!

Must read

rajini

 

சினிமாவைவிட சென்ட்டிமெண்ட்டை நம்புபவர் ரஜினி. ராஜாதிராஜா படத்தில் இரு வேடங்களில் நடித்தவர், தனது கையில் போட்டிருக்கும் ராகவேந்திரா செப்பு பட்டயத்தை கழற்ற மறுத்துவிட்டார். “இரண்டு கேரக்டர்களுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆகவே  ஒரு கேரக்டருக்கு அதை கழற்றிவிடுங்கள்” என்று  இயக்குநர் சொன்ன போதும்  உறுதியாக மறுத்துவிட்டார்.

அப்படி ரஜினி கழற்றிவிடாத செண்ட்டிமெண்ட்டுகளில் ஒன்று, தனது படத்தின் முதல் காட்சியை ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள பிள்ளையார் கோயில் செட்டில் படமாக்க வேண்டும் என்பது.

இதுவரை தனது படங்களுக்கு அப்படியே கடைபிடித்து வருகிறார். ஆனால் தற்போது உருவாகவிருக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு வரும் 17ம் தேதி மலேசியாவில் துவங்கவிருக்கிறது.

மலேசியாவில்  பெனாங்கு பகுதியில்  இருக்கும் விநாயகர் கோயிலில் படத்தின் முதல் காட்சியை படமாக்கலாம் என்று திட்டமிட்டுவிட்டார். அங்கு பினாங்கு பகுதியில் இருக்கிறது. ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில்.  சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோயில் மர வேலைப்பாடுகளால் ஆனது.   1967ம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்ட இந்த கோயிலுக்கு 1971,1991ம் ஆண்டுகளில் குடமுழுக்கு விழாவும் நடந்தது.

kabali

ஆலயத்தின் மையப்பகுதியில் ஸ்ரீ செல்வ விநாயகர் சன்னதியும், வலப்புறம்சுப்ரமணியர் சன்னதியும், இடதுபுறம் மாரியம்மன் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது.இது தவிர துர்க்கா தேவி, இடும்பன், வழி பிள்ளையார், திரிசூலம், நவகிரகம் உள்ளிட்டதெய்வங்களின் சன்னதிகளும் இவ்வாலயத்தில் அமைந்துள்ளது.

இங்குதான் கபாலி படத்தின் முதல் காட்சி, ரஜினியின் ஆசைப்படி படமாக்கப்பட போகிறதாம்!

இதிலும் ஏதும் மாற்றம் வருமோ என்ற படபடப்பும் நிலவுகிறது. வழக்கம்போல ரஞ்சித், தனது ட்விட்டர் பக்கத்தில் விடையளிப்பார் என்று நம்புவோமாக!

More articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article