மலிவுவிலையில் பிராட்பேண்ட் – ஆந்திர அரசு அதிரடி.

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

broadbandமதுவிலக்கை அமல்படுத்தி , மலிவுவிலை  பிராட்பேண்ட் சேவையைத் துவங்குமா தமிழக அரசு ?
ஆந்திர மாநிலம் முழுவதும் மலிவான விலையில் பிராட்பேண்ட் வழங்கும் முனைப்பில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு  ஆந்திர ஃபைபர் நெட் (AP Fibernet) திட்டத்தை வியாழனன்று துவக்கி வைத்து பெரும் ஐ.டி. நிறுவனமான சிஸ்கோ வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்தியாவிலேயெ மாநிலம் தழுவிய பிராட்பேண்ட் திட்டமிது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாத இறுதியில் விசாகப் பட்டிணம், ஸ்ரீகாகுளம், விசயநகரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மலிவான விலையில் பிராட்பேண்ட் வழங்கும் இந்தத் திட்டம் ஒரு மைல்கல்லாக அமையும். மீதமுள்ள மாவட்டங்களில் ஜுலை மாத இறுதியில் இணைப்பு வழங்கப் படும்.
இந்தச் சேவை தரைவழியாக அல்லாமல் மின்கம்பங்களின் மீது இந்த ஃபைபர் நெட் இணைப்பு வழங்கப் படுமெனவும், 15 Mbps பிராட்பேண்ட்  இணைப்பு149/ மாதம், 100 Mbps பிராட்பேண்ட்  இணைப்பு999/ மாதம் எனவும் வழங்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் சந்தை வியாபாரம் உயர்ந்ததையடுத்து 2013ல் 15.1 ஆக இருந்த இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணைக்கை 2016ல் 33.22 சதவிகிதமாக அதிகமாகியுள்ளது. இந்திய அரசின் “டிஜிட்டல் இந்தியா” முழக்கமும் இந்த உயர்விற்கு காரணம். இது இணையதள வாயிலாக பொதுஅறிவைப் பெறுவோர் எண்ணிக்கையை ஆந்திர மாநில அளவில் வெகுவாக உயர்த்தும்.
பத்திரிக்கை.காம் ஆந்திர அரசின் இந்த திட்டத்தினை உளமாரப் பாராட்டுகின்றது. தமிழக அரசும் இதுபோன்றதொரு திட்டத்தினை துவங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறொம். இணையதளச் சேவை மக்களுக்கு வேகமான தகவல் பரிமாற்றத்திற்கும், புதிய வாய்ப்புகளைத் தேடுவதற்கும் உருவாக்குவதற்கும் உதவும். சமீபத்திய சென்னை வெள்ள பாதிப்பின்போது நிவாரணப் பணியினை மேற்கொள்ள சமூகவலைத்தளம் மிகுந்த உதவியாய் இருந்ததை யாரும் மறுக்கமுடியாது.
2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அடுத்து ஆட்சியமைக்கும் தமிழக அரசு, மதுவிலக்கினை அமல்படுத்தி அதன் வருமான இழப்பை இதுபோன்ற மலிவுவிலை பிராட்பேண்ட் இணைப்பை வழங்கி ஈடுகட்டி திறம்பட ஆட்சி நடத்த வேண்டுமென பத்திரிக்கை.காம் கோரிக்கை வைக்கின்றது.

More articles

Latest article