மதுரை அருகே…  இறந்தவர்  மீண்டும் உயிர் பெற்ற அதிசயம்!

Must read

a
மதுரை:
துரை அருகே இறந்து போனதாக மருத்துவர் கூறிய கூலித்தொழிலாளி இறுதிச்சடங்கு செய்த போது உயிர்பிழைத்தார். இதைக் கண்டு அவரது குடும்பத்தினர் குதூகலம் அடைந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த பெருமாள்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாண்டித்துரை.  இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாண்டித்துரை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். இதையடுத்து உறவினர்கள் இறுதி சடங்கு செய்வதற்காக உறவினர்களுக்கு தகவல் அனுப்பினர்.
பாண்டித்துரையின் குடும்பத்தினரும், உறவினரும் கதறி அழுதனர். அப்போது திடீரென பாண்டித்துரை மெல்ல கண் விழித்தார். இதைக்கண்டு குடும்பத்தினரும் உறவினர்களும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர்.
தன்னைச் சுற்றி உட்கார்ந்து ஏன் எல்லோரும் அழுகிறார்கள், தனக்கு ஏன் மாலை போடப்பட்டிருக்கிறது என்று புரியாமல் விழித்தார் பாண்டித்துரை.
பாண்டித்துரை கண் விழித்ததை அடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  தற்போது பாண்டித்துரை உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்துவிட்டதாக மருத்துவர்களால் கூறப்பட்டவர் மீண்டும் உயிர் பெற்றது அப்பகுதியில் பெரும் ஆச்சரியைத்தை ஏற்படுத்தி உள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article