namitha

கொழு கொழு நமீதா இப்போது அத்தனை ஸ்லிம் ஆகிவிட்டார்.

விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழில் அறிமுகமான நமீதா ‘ஏய்’, ‘இங்லீஸ்காரன்’, ‘சாணக்யா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

namitha01

 

 

கதாநாயகியாக மட்டுமின்றி கவர்ச்சி நாயகியாகவும் ஒரு ரவுண்ட் வந்தார்.  ஆனால் இளைஞன் படத்திற்குப் பிறகு திரையுலகில் வாய்ப்பு இல்லை.  கடை திறப்பு விழாக்களில் பிஸியானார். பிறகு அதுவும் இல்லாமல் போனது.

namitha3

இதற்கெல்லாம் காரணம், அளவுக்கு மீறி சதை போட்டதுதான் என்று அவரது நலம் விரும்பிகள் சொல்ல..  டயட், உடற்பயிற்சி என்று ஸ்லிம் ஆகி இப்போது மீண்டும் வந்திருக்கிறார்.

“இப்போ  இருபது கிலோ குறைந்து 76 கே.ஜி.யில இருக்கேன். ஸோ..  ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆசையா இருக்கு!” என்றவர் அதோடுவிட்டிருந்தால் பரவாயில்லை..

namitha1

“அரசியலில் குதிக்கப்போகிறேன்” என்கிறார் கேஷூவலாக. ஏதோ கிண்டலுக்கு சொல்கிறாரே என்று மீண்டும் கேட்டால், “அட.. அமைச்சராகி மக்களுக்கு சேவை (இது சாப்பிடும் சேவை அல்ல.. சமூகசேவை என்பது குறிப்பிடத்தக்கது!)  செய்ணும்! அதான் என் வாழ்க்கை லட்சியம்!” என்கிறார் அதிரடியாக.

மேலம் “போன எல்க்ஷன் அப்பவே நெறைய கட்சிங்க கூப்டுச்சு… பட் அப்போ எனக்கு நோ ஐடியா. இப்போ வருது. ஆனா வர்ற எலக்சன்லே நிக்குது.. ஜெயிக்குது!” என்கிறார் கன்னி (!) தமிழில்!

“குஷ்புவுக்கு போட்டியா” என்றால், “நோ.. நோ.. “ என்று அவசரமாக மறுக்கிறார்.

namitha2

“திருமணம் எப்போது” என்றதும், “மேரேஜ் ஆசை எனக்கும் இருக்கு. பட் ஹஸ்பண்ட் யார்னு கடவுள்தான் தீர்மானிப்பாரு.  எனக்கு வர்ற ஹஸ்பண்ட் பெரிய  கோடீஸ்வரனாகவோ அல்லது தொழில் அதிபராகவோ இருக்கணும்னு ஆசைப்படலை.

தாடி வச்சு கண்ணாடி போட்டிருந்தாலும் ஓகே… பட்.. பாசமான ஆளா இருக்கணும்! மூணு  சில்ரன் பெத்துக்கணும்!” என்று பர்சனலும் பேசுகிறார்  நமீதா.

அது சரி.. எந்த கட்சியில் சேரப்போகிறாராம்?

“நேஷனல் பார்ட்டிதான் மை சாய்ஸ்” என்கிறார். பார்ப்போம்… எந்த கட்சிக்கு சான்ஸ் கிடைக்கிறது என்று!