0
 
க்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்திருப்பது பற்றி திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.பாலபாரதி  தனது முகநூல் பக்கத்தில் சூசமாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஒரு நீண்ட இழுபறிக்குப்பின் தனது கூட்டணி முடிவை  விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார் . இக்கூட்டணி உடன்பாடு குறித்து மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களும், விஜயகாந்தும் இன்று சென்னை தேமுதிக அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து அறிவித்துள்ளனர். இதனை அடுத்து தமிழக தேர்தல் களத்தின் கூட்டணி நிலவரம் சூடுபிடித்துள்ளது.
இக்கூட்டணி முடிவு பற்றி  செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட்கட்சி எம்.எல்.ஏவும் கவிஞருமான.பாலபாரதி  தனது முகநூல் பக்கத்தில் “ நல்லதோர்  வீணை செய்தே…” என்ற பாரதியின் வரியை மேற்கோள் காட்டி தனது  அதிருப்தியை சூசகமாக தெரிவித்துள்ளார். அதேபோல் கேப்டனின் பலமான கூட்டணியை எதிர்பார்த்திருந்த  அவருடய தேமுதிக தொண்டர்கள் பலரும் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்துள்ளனர்.
தமது கூட்டணியில் உள்ளவர்களிடமே ஏற்பட்டிருக்கும் இந்த அதிருப்தி தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.
 
***********************************