மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் தலைமையேற்க வாய்ப்பில்லை: வைகோ

Must read

Vaiko 1_0
திருச்சியில் இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘’மக்கள் நலக்கூட்டணியில் நான், திருமாவளன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இதுவரை 4 கட்ட சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து உள்ளோம்.
மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் தே.மு. தி.க. தலைமையில் கூட்டணி அமையுமா? என்றால் வாய்ப்பில்லை. மக்கள் நலக்கூட்டணி தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் நன்றாக பதிவு செய்யப்பட்டுவிட்டது.
எங்கள் கூட்டணி விமானம் நன்றாக ‘டேக்ஆப்’ ஆகிவிட்டது. மக்கள் நல கூட்டணியின் செயல் திட்டங்கள் மக்கள் மனதை நன்றாக சென்றடைந்து விட்டது. மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு ஜி.கே.வாசனையும் ஏற்கனவே நாங்கள் அழைத்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

More articles

Latest article