மகர ராசி
மகர ராசி

நேர்மைக்கும் நியாயத்திற்கும் பெயர் பெற்ற மகரராசி அன்பர்களே..
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துகொண்டு குடும்ப குதர்க்கங்களையும், வீண் செலவுகளையும் மனவருத்தங்களையும், அளித்த ராகுபகவான் இப்போது 8-ல் மறைகிறார். இனி உங்களுக்கு ஓரளவு நல்ல காலம்தான். மனதில் அமைதி நிலவும். தந்தையாருடன் இருந்த மன வருத்தங்கள் அகலும். பூர்வீகச் சொத்து கைக்கு வந்து சேரும். ஆனால் எளிதாக முடிக்க வேண்டிய சில காரியங்களைக் கூட இரண்டு, மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டியிருக்கும். வருமானம் அதிகரிக்கும். அதே நேரம் வருமானத்தை மீறி செலவுகள் வந்து நிற்கும்.
வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். தம்பதிகளுக்குள் நீயா நானா போட்டி தலைதூக்கும். அதைத் தவிர்ப்பது நல்லது. சொந்த சோகங்களை பிறருடன் பகிர்ந்துகொள்ளாதீர்கள். 08.01.2016 முதல் 10.03.2016 வரை உங்களை சங்கடத்துக்குள்ளாக்கும் சம்பவங்கள் நடக்கக்கூடும். சட்டத்துக்குப் புறம்பாக, யாருக்கும் உதவி செய்ய வேண்டாம்.
11.03.2016 முதல் 15.11.2016 வரை.. எதிர்பார்த்த பணம் வரும். புது வேலை வாய்ப்போ, பதவி உயர்வோ கிடைக்கும். நீங்கள் அங்கம் வகிக்கும் அமைப்பில் முக்கியப் பொறுப்பு கிடைக்கும். குழந்தை இல்லாதோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வந்து மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். . குலதெய்வ கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 16.11.2016 முதல் 25.7.2017 வரை திருமணம், , கிரகப்பிரவேசம் போன்ற மங்கள நிகழ்வுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பும் நிலவும். வீட்டுக்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
வழிபாடு: விழுப்புரம் மாவட்டம் தும்பூர் ஸ்ரீநாக கன்னியம்மனை வணங்குங்கள்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து புது முயற்சிகளில் வெற்றிகளை அள்ளித் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிற்குள் அமர்கிறார். இது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலகட்டம். குடும்பத்தினருடன் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். உடல் உபாதைகளால் சிரமப்பட நேரிடும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் அபாயம் உண்டு.
08.01.2016 முதல் 12.07.2016 வரை சுபச்செலவுகள் அதிகமாகும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டு. . 13.07.2016 முதல் 20.03.2017 வரை வேலைச்சுமையால் உடல் சோர்வடையும். பிறரை குறை கூறுவதை தவிருங்கள். நீண்டகாலமாக இழுத்துவந்த வழக்கு ஒன்றில் சாதகமான முடிவு வரும்.
பொதுவாக, இந்த ராகு கேது மாற்றம் உங்களை பக்குவப்படுத்துவதுடன், வாழ்க்கையின் சூட்சுமத்தை உணர்த்துவதாக அமையும். ஆகவே எதையும் தாங்கும் மனதுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராகுங்கள்.